தேசிய சுகாதார பராமரிப்புக் குழும பலதுறை மருந்தக (NHGP) கொவிட்-19 போராட்ட வீரர் விருது ஆறு பேருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அந்த ஆறு பேரும் பலதுறை மருந்தகச் சுகாதாரப் பராமரிப்பு முன்களப் பணியாளர்கள்.
அதிபர் ஹலிமா யாக்கோப்பிடம் இருந்து நேற்று அவர்கள் விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
இந்தப் பலதுறை மருந்தக அமைப்பின் 20வது ஆண்டுவிழாவையொட்டி இஸ்தானாவில் மெய்நிகர் ரீதியில் நடந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன.
டாக்டர் ரூஃபுஸ் டேனியல், 52, திருவாட்டி டான் பெக் ஹூன், 50, ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
கொரோனா கிருமிக்கு எதிரான போராட்டத்தில் துணிச்சலோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டதற்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

