வசதி குறைந்த முதியவர்களுக்கு உதவும் 'புளோசம் சீட்ஸ்' போக்குவரத்து சேவை

வசதி குறைந்த முதியவர்களுக்கு உதவும் 'புளோசம் சீட்ஸ்' போக்குவரத்து சேவை

1 mins read
aa02cd1c-1046-46c5-84a9-9a0afd72fdd4
முதியவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவதைப் பார்வையிட்ட போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் (இடக்கோடி), பின்னர் அந்த வாகனத்தை ஓட்டிப் பார்த்தார். படம்: புளோசம் சீட்ஸ் -

வசதி குறைந்த முதி­ய­வர்­கள் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குச் சென்று வர உத­வும் வகை­யில் 'புளோ­சம் சீட்ஸ்' நன்­கொடை அமைப்பு போக்­கு­வ­ரத்து சேவையை சுகா­தார அமைச்­சின் கீழ் செயல்­படும் 'ஏஐசி' எனப்­படும் ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்­புக்­கான அமைப்­பின் ஆத­ர­வு­டன் அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

நேற்று அந்த அமைப்பு இணை­யம் வழி நடத்­திய நன்­கொடை திரட்டு நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங்.

இந்த நன்­கொடை திரட்டு வழி $600,000 தொகை­யைத் திரட்ட 'புளோ­சம் சீட்ஸ்' இலக்கு கொண்­டுள்­ளது.