தர்மன்: சமூக மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரிக்கிறது

தர்மன்: சமூக மருத்துவமனைகளின் பங்களிப்பு அதிகரிக்கிறது

1 mins read
64f48596-7183-4a15-8b99-0a4b7c8fa927
-

சிங்­கப்­பூ­ரின் மக்­கள் தொகை மூப்­படைந்து வரு­வ­தா­லும் நாள்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்­கை­ கூடி வரு­வ­தாலும் இங்­குள்ள சமூக மருத்­து­வ­ம­னை­களின் பங்­க­ளிப்பு அதி­க­ரித்­துள்­ளது என்று மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம் தெரி­வித்­தார்.

செயின்ட் லியுக் மருத்­து­வ­ம­னை­யில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற மெய்­நி­கர் நன்­கொடை கலை நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற திரு தர்­மன், "கொவிட் நில­வ­ரத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தைத் தவிர்த்து, நமது சமூக மருத்­து­வ­ம­னை­க­ளின் பங்­க­ளிப்பு தொடர்ந்து வள­ரும். நாள்­பட்ட நோயா­ளி­க­ளுக்­குச் சிறப்­பான பரா­ம­ரிப்­பை­யும் இயன் மருத்­து­வம், உடல் செயல்­முறை சிகிச்சை, பேச்சு சிகிச்சை போன்­ற­வற்றை வழங்க சமூக மருத்­துவ மனை­களே சிறந்த இட­மா­கத் திகழ்­கின்­றன. அவற்­றின் முக்­கி­யத்­து­வம் மேலும் வளர்­கிறது" என்­றும் திரு தர்­மன் கூறி­னார்.