முன்னாள் தேசிய காற்பந்து வீரர் சலிம் மொய்ன் மறைவு

முன்னாள் தேசிய காற்பந்து வீரர் சலிம் மொய்ன் மறைவு

1 mins read
f7129b43-e569-4060-833b-d1174c3cd13d
-

சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் தேசிய காற்­பந்து வீர­ரான சலின் மொய்ன் (படம்) நேற்று கால­மா­னார். அவ­ருக்கு வயது 59.

சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம் நேற்று தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் சலி­மின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்­தத்­தைத் தெரி­வித்­துக்­கொண்­டது.

"1980களி­லி­ருந்­தும் 1990களி­லும் தேசிய காற்­பந்­துக் குழு­வில் முக்­கி­ய­மான மத்­திய திடல் ஆட்­டக்­கா­ர­ராக மலே­சி­யக் கிண்­ணப் போட்­டி­கள், உல­கக் கிண்ண தேர்­வுச் சுற்­றுப் போட்­டி­கள் என பல போட்­டி­களில் தமது திற­மையை வெளிப்­ ப­டுத்­திய சலி­மின் மறைவு அதிர்ச்­சி­யை­யும் கவ­லை­யை­யும் அளிக்­கிறது.

"ஓர் ஆட்­டக்­கா­ர­ராக ஓய்வு பெற்­ற­வு­டன், காற்­பந்­துச் சங்க அள­வில் கோம்­பாக் யுனை­டெட், பாலஸ்­டி­யர் கல்சா, தெம்­ப­னிஸ் ரோவர்ஸ், உட்­லண்ட்ஸ் வெல்­லிங்­டன் ஆகிய குழுக்­க­ளின் பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பிர­கா­சித்­தார்," என்று சிங்­கப்­பூர் காற்­பந்­துச் சங்­கம் தெரிவித்தது.

ஹவ்­காங் யுனை­டெட் குழு­வில் தலை­மைப் பயிற்­று­விப்­பா­ள­ராக 2015ல் திரும்­பிய சலிம், அதன் விளை­யாட்­டா­ளர்­க­ளின் திறன் மேம்­பாட்­டில் முக்­கிய பங்கு வகித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு சிங்­கப்­பூர் லீக் போட்­டி­யில் ஹவ்­காங் யுனை­டெட் ஐந்­தாம் இடத்­தில் முடித்­து பாராட்டு பெற்றதற்கு சலிம் முக்கிய தூணாக விளங்கினார் என்று அந்தச் சங்கம் தனது அறிக்கையில் கூறியது.