இரவு நேர கேளிக்கை துறைக்கு உதவி; அதிருப்தியில் சில வர்த்தகங்கள்

இரவு நேர கேளிக்கை துறைக்கு உதவி; அதிருப்தியில் சில வர்த்தகங்கள்

1 mins read
c58ac1c6-c739-4f5e-a5fb-83d89a81a5f4
-

இரவு நேர கேளிக்கைக்கூடங்களின் வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் உதவிகள் வரவேற்கப்பட்டாலும் அவை போதவில்லை என்று சிங்கப்பூர் வர்த்தகங்கள் சில கூறுகின்றன. அடுத்த மாதம் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயல்பட அரசாங்கம் சில வர்த்தகங்களை அனுமதித்துள்ளது. ஆரம்ப நடவடிக்கையாக, இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரையிலான இதற்கான சோதனைத் திட்டத்தில் 25 வர்த்தகங்கள் வரை பங்கேற்கலாம்.

கடந்த ஒன்பது மாதங்களாக மூடிய நிலையில் இருந்துவரும் வர்த்தகங்களுக்கான இந்த உதவி, சிலருக்கு திருப்தியை அளிக்கவில்லை. வேறு வகையான வர்த்தகங்களுக்கு மாறுவதற்கான உதவிகள் குறித்த 50க்கும் மேற்பட்ட கேள்விகள் குவிந்திருப்பதாக சிங்கப்பூர் இரவுநேர வர்த்தகச் சங்கத்தின் தலைவர் ஜோசஃப் ஓங் தெரிவித்தார்.