மேலும் அதிக வளர்ச்சியை எதிர்பார்த்திருக்கும் கட்டணத் தளங்கள், இணைய வர்த்தகங்கள்

மேலும் அதிக வளர்ச்சியை எதிர்பார்த்திருக்கும் கட்டணத் தளங்கள், இணைய வர்த்தகங்கள்

1 mins read

கொவிட்-19 கொள்ளைநோய் நெருக்­க­டி­யால் இணைய வர்த்­த­கம் பெரு­ம­ளவு அதி­க­ரித்­துள்­ளது.

இச்­சூ­ழ­லில், கட்­ட­ணம் செலுத்தும் தளங்­களும் பொருள் வாங்­கும் இணை­யத்­த­ளங்­களும் கூடு­தல் வளர்ச்சி அடை­யும் இலக்­கைக் குறி­வைத்­துள்­ளன.

உண­வங்­கா­டி­யில் சாப்­பாடு வாங்­கு­வது முதல் இணை­யத்­தில் பொருள் வாங்­கு­வது வரை, மின்­னி­யல் கட்­டண முறை பர­வ­லாக இப்­போது நாடப்­ப­டு­கிறது.

கொள்ளைநோயால் மின்­னி­லக்­கப் பயன்­பாடு துரி­த­மா­கி­யுள்ள நிலை, சில நிறு­வ­னங்­க­ளுக்­குச் சாத­க­மாக அமைந்­துள்­ளது.

கடந்த மாதங்­களில் கூடு­தல் பய­னீட்­டா­ளர்­கள் தங்­க­ளின் சேவை­யைப் நாடியுள்ளதாக மின்­னி­யல் கட்­டண நிறு­வ­னங்­களும் இணைய வர்த்­தக நிறு­வ­னங்­களும் தெரி­வித்­துள்­ளன. புதிய பங்­காளி­கள், பல­த­ரப்­பட்ட சேவை­கள் என தங்­க­ளின் செயல்­பா­டு­களை விரிவு­ப­டுத்தி வரு­வ­தா­க­வும் அவை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறின.

"தனி­ந­பர் சுகா­தா­ரத்­தில் பயனீட்­டா­ளர்­கள் இப்­போது கூடு­தல் கவ­னம் செலுத்­து­கின்­ற­னர். அத­னால் பணத்­தைக் கையில் கொடுக்­கும் பழக்­கம் மாறி, கை பரிமாற்றமில்லா கட்­டண முறை­களை அவர்­கள் பெரும்­பா­லும் நாடத் தொடங்­கி­யுள்­ள­னர்," என்று கூறி­னார் டிபி­எஸ் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த அந்­தோனி சியு.

விற்­ப­னை­ அதி­க­ரிக்க, மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தன் அவ­சி­யத்தை வர்த்­த­கங்­களும் உணர்ந்­து­ கொண்டுள்ளன என்­றார் திரு சியு.