புதிதாக எண்மருக்கு கொவிட்-19

புதிதாக எண்மருக்கு கொவிட்-19

1 mins read
5281f6e2-0b71-471c-b3c1-2ae9a0488a38
-

சிங்கப்பூரில் புதிதாக எட்டு பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சிங்கப்பூரின் கிருமித்தொற்று எண்ணிக்கை 58, 064க்கு உயர்ந்துள்ளது.

புதிய நோயாளிகள் அனைவருமே வெளிநாட்டில் இந்நோய் தொற்றி இங்கு வந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் வீட்டில் தங்கும் உத்தரவுக் கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சமூகத்திலோ ஊழியர் தங்கும் விடுதியிலோ எந்தப் புதிய சம்பவமும் பதிவாகவில்லை.