பலரது திருமண வாழ்வைக் கெடுத்த 'இறை தூதுவர்'

பலரது திருமண வாழ்வைக் கெடுத்த 'இறை தூதுவர்'

1 mins read
d74665bc-f0ee-4dcb-aeb8-b3cd3a57589f
-

உடற்பிடிப்பு பணியாளராக முன்புப் பணியாற்றிய ஆடவர் ஒருவர் தம்முடன் இறைவன் பேசுவதாகவும் தேவைப்படும் முஸ்லிம்களுக்கு உதவ சூதாட்டம் அனுமதிக்கப்படலாம் என்றும் கூறி வருகிறார்.

தம்மை ஓர் இறைத் தூதுவர் எனக் கூறிக்கொள்ளும் இவரது போதனையைக் கேட்டு திருமணமான பெண்கள் சிலர் தங்களது கணவர்களைவிட்டுப் பிரிந்து இவரது 'ஆன்மிக' மனைவிகளாக மாறிவிட்டதாக அந்தப் பெண்களின் முன்னாள் கணவர்கள் கூறுகின்றனர்.

தொடக்கத்தில் அனைவருமே இவரைப் பின்பற்றியிருந்தனர். இவர் நடத்தும் ஒவ்வொரு வகுப்பிலும் 'அருள் வந்தது' போல ஏதேனும் கூறுவார். காலப்போக்கில் இவ்வாறு இவர் கூறி வந்ததைக் குழுவிலுள்ள ஆடவர்கள் நிராகரிக்கத் தொடங்கினர்.

50 வயது மதிக்கத்தக்க இவரைப் பின்தொடரும் பெண்களில் உள்ளூர் பட்டதாரிகளும் அடங்குவர். ஒருவர், இங்குள்ள உள்ளூர் மலாய் முஸ்லிம் அமைப்பில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். இவரது சமயக்குழுவில் சேர்ந்துள்ள பெண்கள் மூவரின் முன்னாள் கணவர்களும் இக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் இது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.

மேல் விவரங்கள், நாளைய அச்சுப்பிரதியில்...