நீண்டகால வளர்ச்சி மையமாக கடல் தொழில்துறை திகழ்கிறது

நீண்டகால வளர்ச்சி மையமாக கடல் தொழில்துறை திகழ்கிறது

2 mins read
dbb24c0c-4cfd-456e-b30d-9f4662e82f10
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடல் மற்­றும் கட­லோர தொழில்­துறை இப்­போது சவால்­மிக்க காலத்தை எதிர்­நோக்­கு­கிறது என்­றா­லும் நீண்டகால வளர்ச்­சிக்­கான துறை­க­ளைக் கொண்­டுள்ள மைய­மாக அது திகழ்­கிறது என்று வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்­தார்.

செம்ப்­கார்ப் மரின் என்ற கடல் துறை பொறி­யி­யல் நிறு­வ­னத்­துக்­குச் சென்ற அமைச்­சர், இந்­தத் தொழில்­துறை பல ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை ஏற்ற இறக்­கம் கண்டு வரு­கிறது என்­றா­லும் இப்­போது மிக­வும் சவால்­மிக்க காலத்தை எதிர்­நோக்­கு­வ­தா­கக் கூறி­னார்.

இந்­தத் துறை பொறி­யி­யல் ஆற்­றல்­கள் அதி­கம் தேவைப்­படும் ஒன்று என்­ப­தால் ஆற்­றல் மிகுந்த, தேர்ச்­சி­மிக்க ஊழி­யர்­களை நீண்­ட­காலப் போக்­கில் பலப்­ப­டுத்தி வர­வேண்­டிய தேவை இருக்­கிறது என்­பதை அமைச்­சர் நினை­வூட்­டி­னார்.

நீண்­ட­கால போக்­கில் நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் நல்ல முறை­யில் மேம்­ப­டு­வ­தற்கு உதவி கிடைக்­கிறது என்­பதை உறு­திப்­ப­டுத்த திட்­டம் தீட்­டப்­பட்டு இருப்­ப­தற்கு இதுவே கார­ணம் என்று திரு சான் கூறி­னார்.

இந்­தத் தொழில்­துறை உரு­மாறு­வ­தற்­கான முயற்­சி­களை கொவிட்-19க்கு முன்பே எடுத்­த­தால் அதன் பலன்­கள் தெரி­யத் தொடங்­கி­விட்­ட­தா­கக் கூறிய அமைச்­சர், சிங்­கப்­பூ­ரின் கடல் மற்­றும் கட­லோர தொழில்­துறை நிறு­வ­னங்­கள் பெற்ற தரு­விப்பு ஆணை­களின் மதிப்பு, சென்ற ஆண்­டில் $4.5 பில்­லி­ய­னாக அதி­க­ரித்­தது என்­றார். இந்த மதிப்பு 2016ல் $820 மில்­லி­யன்­தான்.

கப்­பல் பழு­து­பார்ப்பு, கப்­பல் கட்­டு­தல், கட­லில் எண்­ணெய் துரப்­பண மேடை­களை அமைத்­தல், கட­லோர பொறி­யி­யல் சேவை­கள் எண்­ணெய்க் கிணறு சாத­னங்­கள் தயா­ரிப்பு, கட­லோர ஆத­ரவு கப்­பல்­கள், பட­கு­கள் கட்­டு­மா­னம் மற்­றும் வாட­கைத் தொழில் ஆகி­யவை கடல் மற்­றும் கட­லோ­ரத் தொழில்­து­றை­யில் உள்­ள­டங்­கும்.

இந்­தத் துறை ஏறக்­கு­றைய 77,000 பேருக்கு வேலை கொடுக்­கிறது. கெப்­பல் ஆஃப்ஷோர் & மரின், செம்ப்­கார்ப் மரின், எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் மரின் ஆகி­யவை இந்­தத் துறை­யின் பிரம்­மாண்ட நிறு­வ­னங்­கள்.

இவற்­றுக்கு உறு­து­ணை­யாக சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­கள் அடங்­கிய ஒரு கட்­ட­மைப்பு செயல்­ப­டு­கிறது.

கொவிட்-19 கார­ண­மாக இத்­தொ­ழில்­துறை படு­மோ­ச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தைச் சுட்­டிய திரு சான், இயற்கை திரவ எரி­வாயு, கட­லோர காற்­றா­லை­கள், அறி­வார்ந்த மற்­றும் மின்­னி­லக்க உற்­பத்தி போன்ற புதிய வளர்ச்­சித் துறை­களில் இந்­தத் துறை நிறு­வ­னங்­கள் தொடர்ந்து ஈடு­பட முடி­யும் என்றார்.

"மொத்­தத்­தில் குறு­கி­ய­கால சவால்­கள் இருந்­தா­லும் இந்­தத் துறை முன்­னே­று­வ­தற்­கான வாய்ப்பு­கள் தெரி­கின்­றன.

"உல­குக்­குத் தேவைப்­படும் பொறி­யி­யல் தேவை­களை நிறை­வேற்றி வைக்­கும் புதிய துறை­களில் வாய்ப்­பு­கள் உள்­ளன.

"இந்­தத் துறைக்­கும் இதைச் சார்ந்த சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கும் தொடர்ந்து உதவி செய்­யும் உறுதி உள்­ள­தால் இந்­தச் சிரம காலத்தை வென்று நாம் முன்­னேற முடி­யும்," என்று அமைச்­சர் திரு சான் தெரி­வித்­தார்.

அமைச்சர் சான்: கொவிட்-19க்கு முன்பே உருமாற்ற முயற்சிகளை எடுத்ததால் பலன்