கட்டுப்பாடுகளை மீறி வேகமாக டுரியான் வாங்கப் போன ஆடவர்; அபராதம் மட்டுமல்ல ....

கட்டுப்பாடுகளை மீறி வேகமாக டுரியான் வாங்கப் போன ஆடவர்; அபராதம் மட்டுமல்ல ....

1 mins read
3014cd3e-dd51-4d84-a9fc-8708b1f9394c
படம்: ஊடகம் -

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­த­போது நண்­பர் ஒரு­வரு­டன் டுரி­யான் பழங்­களை வாங்­கு­வதற்­காக ஒரு­வர் வீட்­டை­விட்டு வெளியே சென்­றார்.

காரில் அவர் வேக­மா­கச் சென்­ற­தைக் காட்­டிய ஒரு படத்தை அவ­ரு­டைய நண்­பர் சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றி­விட்­டார்.

நாசர் ருஷ்டி நாசர் ரோஸ்லி, 21, என்ற அந்த ஆட­வ­ருக்கு நேற்று $3,000 அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. ஓராண்டு காலம் வாக­னத்தை ஓட்­டக்­கூ­டாது என்று தடை விதிக்­கப்­பட்­டது.

ஆபத்­தான முறை­யில் வாக­னத்தை ஓட்­டி­யது, கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீறி டுரி­யான் பழங்­களை வாங்க வீட்­டை­விட்டு வெளியே சென்­றது ஆகி­யவை தொடர்பான இரண்டு குற்­றச்­சாட்டு­க­ளை நேற்று அவர் ஒப்­புக்­கொண்­டார்.

வேறு ஒரு­வரை பார்ப்­ப­தற்­காக கொவிட்-19 நிபந்­த­னை­களை மீறி வீட்­டை­விட்டு வெளியே சென்­ற­தா­கக் கூறும் மூன்­றா­வது குற்­றச்­சாட்டு கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

நாசர் இந்­தக் குற்­றச் செயல்­களை மே 9ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு செய்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் மத்­திய விரை­வுச்­சா­லை­யில் சிலேத்­தார் விரை­வுச்­சா­லையை நோக்கி 160 கி.மீ. வேகத்­தில் சென்­றதை காரில் இருந்த அவ­ரு­டைய நண்­பர் எடுத்து சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றிய படம் காட்­டி­யது.