1,000 வேலை வாய்ப்புகள்: சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்காக வேலைச் சந்தை

1,000 வேலை வாய்ப்புகள்: சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளுக்காக வேலைச் சந்தை

2 mins read
f10076d6-3136-4555-8067-57fd76057c48
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முன்­கள தொழில்­து­றை­களில் நில­வும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யைப் போக்­கு­வ­தற்கு உத­வும் வகை­யில் நியாய ஏற்­பாட்­டிற்­கான சிங்­கப்­பூர் குத்­த­கைதாரர்கள் ஒன்­றி­யம் (SGTUFF) என்ற அமைப்பு வேலை சந்தையை நடத்து­கிறது.

கியட் ஹோங் சமூக மன்­றத்­தில் இம்­மா­தம் 12, 13ஆம் தேதி­களில் நடக்­கும் அந்­தச் சந்­தை­யில் 1,000 வேலை வாய்ப்­பு­களை பல்­வேறு நிறு­வ­னங்­களும் வழங்­கும்.

சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் அந்த வாய்ப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­திக்கொள்­ள­லாம்.

கிடைக்­கக்­கூ­டிய வேலை­களில் பாதிக்­கும் அதி­க­மா­னவை நிபு­ணர்­கள், நிர்­வா­கி­கள், மேலா­ளர்­கள், தொழில்­நுட்­பர்­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்டு இருக்­கின்றன.

யூனி­யன் பவர், லெஸ் அமிஸ் குரூப், தி ஸ்பா ஸ்பி­ரிட் குரூப், சூப் ஸ்பூன் முத­லான பல நிறு­வனங்­களும் தங்களிடம் உள்ள வேலை வாய்ப்­பு­களை அந்­தச் சந்தை­யில் விளக்க இருக்­கின்­றன.

வேலைச் சந்­தைக்கு ஏற்­பாடு செய்­யும் ஒன்­றி­யம், கடந்த பிப்­ர­வ­ரி­யில் தோற்­றுவிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 பாதிப்பு­கள் தொடங்­கி­ய­போது தங்களுடைய இடங்­க­ளின் முத­லா­ளி­கள் நியா­ய­மற்ற முறை­யில் நடந்­து­கொண்­ட­தாக சில்­லறை வர்த்­த­கம், உணவு, பானம் மற்­றும் சேவைத் துறை­களைச் சேர்ந்த வாட­கை­தாரர்­கள் கவலை தெரி­வித்­த­னர்.

அந்­தக் கவ­லை­யைப் போக்­கும் வகை­யில் அவர்­கள் ஒன்­றா­கச் சேர்ந்து ஒன்­றி­யம் ஒன்றை அமைத்­த­னர். இப்­போது அந்த அமைப்­பில் 700க்கும் அதிக தொழில் உரி­மை­யா­ளர்­கள் இருக்­கி­றார்­கள். அவர்­கள் சுமார் 3,100 சில்­லறை வர்த்­த­கக் கடை­களை நடத்­து­கி­றார்­கள். அவற்­றில் மொத்­தம் சுமார் 24,970 பேர் வேலை பார்க்­கி­றார்­கள்.

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் வாங்­கி­ய­தற்­குப் பிறகு படு­மோ­ச­மான பொரு­ளி­யல் மந்­தத்தை இப்­போது சந்­திக்­கிறது. ஆட்­கு­றைப்­பு­ இது­வரை இல்­லாத அள­வுக்கு அதி­க­மாக இருக்­கிறது என்று இந்த ஒன்­றி­யத்­தின் தலை­வர் டெரன்ஸ் யோவ் கூறி­னார்.

இருந்­தா­லும் இந்த ஒன்­றி­யத்­தில் இடம்­பெற்­றுள்ள பல முத­லா­ளி­களும் ஊழி­யர் பற்­றாக்­கு­றையை தொடர்ந்து எதிர்­நோக்கி வரு­கி­றார்­கள் என்­பதை அவர் சுட்­டி­னார்.

வேலை தேடு­வோ­ருக்கு வேலையைப் பெற்­றுத் தரு­வது இந்த ஒன்­றி­யத்­தின் நீண்­ட­கால முன்­னு­ரி­மை­களில் ஒன்று என்று கூறிய அவர், பல்­வேறு அடித்­தள அமைப்பு­கள், அர­சாங்க அமைப்­பு­க­ளு­டன் சேர்ந்து செயல்­பட்டு இந்த ஒன்­றி­யம் மேலும் பல சிங்­கப்­பூ­ரர்­கள் முன்­கள தொழில்­து­றை­களில் புதிய வாழ்க்­கைத் தொழிலை மேற்­கொள்ள முயற்­சி­களை எடுத்து உள்­ள­தா­க­வும் அவர் கூறினார்.