'உலக இளம்பெண்களின் உந்துசக்தி கமலா ஹாரிஸ்'

'உலக இளம்பெண்களின் உந்துசக்தி கமலா ஹாரிஸ்'

2 mins read
b07dc30d-a55b-44bd-8b55-7ce99e7a85af
சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புதி­தா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு உள்ள அமெ­ரிக்­கத் தலை­வர்­களுக்கு சிங்­கப்­பூ­ரின் அதி­பர், பிர­த­மர், துணைப் பிர­த­மர் ஆகி­யோர் தங்­க­ளது வாழ்த்­து­களைத் தெரி­வித்து உள்­ள­னர்.

அமெ­ரிக்­கா­வின் 46வது அதி­பரா­கத் தேர்ந்ெ­த­டுக்­கப்­பட்டு இருக்­கும் திரு ஜோ பைடன், முதல் பெண் துணை அதி­ப­ராக வென்­றி­ருக்­கும் திரு­வாட்டி கமலா ஹாரிஸ் ஆகிய இரு­வ­ரும் கடுமை­யான போட்­டிக்­கி­டையே வெற்றி பெற்­றுள்­ள­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் (இடது படம்) தமது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்து உள்­ளார்.

குறிப்­பாக, முதல் பெண் துணை அதி­ப­ராக வெற்றி பெற்று இருக்­கும் திரு­வாட்டி கமலா, உல­கம் முழு­வ­தும் உள்ள இளம்­பெண்­க­ளுக்கு ஓர் உந்­து­சக்தி என்­றும் பல 'முத­லா­வது' சாதனை நிகழ்த்த அவர் இடை­யூ­று­க­ளைக் கடக்க அஞ்­சி­ய­தில்லை என்­றும் அதி­பர் ஹலிமா புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளார்.

"உல­க­ள­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் உள்ள சிறு­பான்மை பெண்­ணி­னத்­துக்கு இது ஒரு வர­லாற்று சிறப்­பு­மிக்க தரு­ணம். பெண்­களின் வெற்­றியை எந்­த­வொரு சக்­தி­யா­லும் தடுக்க முடி­யாது என்­பதை திரு­வாட்டி கமலா நிரூ­பித்­துள்­ளார்," என அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

பிர­த­மர் லீ தமது வாழ்த்­துச் செய்­தி­யில், திரு பராக் ஒபாமா தலை­மை­யில் துணை அதிபராகப் பணி­யாற்­றிய திரு ஜோ பைட­னு­டன் 2013ஆம் ஆண்டு சிங்­கப்­பூ­ரி­லும் 2016ல் வாஷிங்­ட­னி­லும் தாம் நடத்­திய சந்­திப்பை நினைவு ­கூர்ந்­தார்.

சிங்­கப்­பூர்-அமெ­ரிக்க பங்­கா­ளித்­து­வத்தை வலுப்­ப­டுத்த திரு பைட­னு­டன் இணைந்து பணி­யாற்ற நம்­பிக்கை தெரி­வித்த திரு லீ, "அமெ­ரிக்­கா­வின் தோழ­னா­க­வும் பங்­கா­ளி­யா­க­வும் தொடர்ந்து விளங்­கு­வதை நீங்­கள் காண­லாம்," என திரு பைட­னுக்­கான வாழ்த்­துச் செய்­தி­யில் அவர் குறிப்­பிட்டு உள்­ளார்.

அதே­போல, "திரு­வாட்டி கமலா ஹாரி­ஸுக்கு வாழ்த்­துத் தெரி­வித்து உள்ள பிர­த­மர், இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­த­வும் பலப்­ப­டுத்­த­வும் உங்­க­ளு­ட­னும் திரு பைட­னு­ட­னும் இணைந்து பணி­யாற்­றும் வாய்ப்­பைப் பெரி­தும் எதிர்­பார்க்­கி­றேன்.

அதே­போல உங்­க­ளது நேர வச­திக்­கேற்ப சிங்­கப்­பூ­ருக்கு மேற்­கொள்ள இருக்­கும் உங்­க­ளது முதல் அதி­கா­ர­பூர்வ வரு­கை­யை­யும் எதிர்­பார்க்­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.