பரிவும் பகிர்தலும் நிறைந்த தீபாவளி

பரிவும் பகிர்தலும் நிறைந்த தீபாவளி

3 mins read
599c0bf7-9b0f-4014-932d-763c27cb95b3
உணவு மற்றும் தீபாவளிப் பலகாரங்களைக் கொண்ட பொட்டலங்களைப் பெற்றுக்கொண்ட சுப்பிரமணியம், வெற்­றிச்­செல்வி பிரேமா தம்பதியர். படம்: த. கவி -

புவாங்­கோக் கிர­சென்­டில் இருக்­கும் தங்­கள் வாடகை வீட்டை தீபா­வ­ளிக்­காக அலங்­க­ரித்­துக்­கொண்­டி­ருந்த திரு சுப்­பிர­ம­ணி­யம் (77), திரு­மதி வெற்­றிச்­செல்வி பிரேமா (70) தம்­ப­தி­யருக்கு நேற்று முன்தினம் பிற்பகலில் ஓர் இன்ப அதிர்ச்­சி­ காத்திருந்தது.

கேலாங் ஈஸ்ட் ஸ்ரீ சிவன் கோவி­லில் தயா­ரிக்­கப்­பட்ட சைவ உணவு, முறுக்­குப் பொட்­ட­லங்­களை அவர்­களின் வீட்­டிற்கு கொண்டு சென்று கொடுத்து, விழாக்­கால உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­னர் ஹுவி இயோ சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள்.

"அமைப்­பு­கள் சேர்ந்து இந்­திய மக்­க­ளுக்கு பண்­டிகைக் காலத்­தின்­போது செய்­யும் இந்த உதவி மகத்­தான ஒன்று. ஓய்வு நேரத்­தின்­போது பொறு­மை­யா­க­வும் அன்­பா­க­வும் எங்­க­ளு­டன் உரை­யாடி, உண­வுப் பொட்­ட­லங்­களை வழங்கி ஆத­ரவு தந்த தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு நன்றி.

"சிங்­கப்­பூர் முழு­வ­தும் இந்து அறக்­கட்­டளை வாரி­யம், மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை போன்ற பல அமைப்­பு­களும் குழுக்­களும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உத­விக்கரம் நீட்டி வரு­கின்­ற­ன. ஒரு சமூ­க­மாக நாம் ஒருங்­கி­ணைந்து செயல்­ப­டு­கி­றோம் என்­ப­தற்கு இது­போன்ற நிகழ்­வு­கள் ஓர் எடுத்­துக்­காட்டு," என்று புன்னகை மலர்ந்த முகத்துடன் ­கூறி­னார் திரு சுப்­ர­ம­ணி­யம்.

ஹுவி இயோ போல, மொத்­தம் 11 இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­ குழுக்­க­ளின் சுமார் 100 உறுப்­பி­னர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் நேற்று முன்­தி­னம் மதி­யம் ஸ்ரீ சிவன் கோயி­லி­லி­ருந்து 1,000 உண­வுப் பொட்­ட­லங்­களைப் பெற்று வாடகை வீடு­ களில் வசிக்­கும் 350க்கும் மேற்­பட்ட வசதி குறைந்த குடும்­பங் களுக்கு விநி­யோ­கம் செய்­த­னர்.

இந்த உணவு அன்­ன­தான நட­வ­டிக்­கையை இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் சமூக சேவா குழு, இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழுக்­க­ளு­டன் இணைந்து நடத்­தி­யது.

"தீபா­வளி என்­பது தனி­மை­யில் கொண்­டா­டும் ஒரு பண்­டிகை அல்ல. பகிர்­த­லும் பாச­மும் நிறைந்த ஒன்­று­தான் தீபா­வளி. கொண்­டாட்ட உணர்­வைப் பகிர்ந்து, சமூ­கத்­திற்கு ஆத­ரவு கொடுத்து இந்­தப் பண்­டிகை காலத்தை தொடங்­கு­கி­றோம்.

"கோவில் ஊழி­யர்­களும் சுமார் 30 தொண்­டூ­ழி­யர்­களும் அதி­கா­லை­யி­லேயே வந்து உண­வைத் தயார் செய்­யத் தொடங்­கி­னர். தானத்­தில் சிறந்­தது அன்­ன­தா­னம். அன்­பு­ட­னும் அக்­க­றை­யு­ட­னும் தயார் செய்­யப்­பட்ட இந்த உணவு அதை பெறும் மக்­க­ளுக்கு மகிழ்ச்­சி­யைத் தரும் என்ற நம்­பிக்­கை­யில் இந்த அன்­ன­தா­னத்தை ஏற்­பாடு செய்­தோம்.

"இதை­ய­டுத்து மக்­க­ளுக்கு எங்­க­ளது சேவை­யைப் புரிய தொடர்ந்து பல முயற்­சி­களை எடுக்­க­வுள்­ளோம். இந்த சவால் மிகுந்த கால­கட்­டத்­தில் பலர் பொரு­ளா­தார ரீதி­யா­க­வும் சமூக ரீதி­யா­க­வும் சிர­மங்­களை எதிர்­நோக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. இவர்­களுக்கு இது­போன்ற நட­வ­டிக்­கை­களின் மூலம் ஆத­ரவு தரு­வது முக்­கி­யம் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்று உறு­தி­யு­டன் கூறி­னார் சமூக சேவா குழு­வின் தலை­வர் திரு­மதி சுசிலா கணே­சன்.

கொவிட்-19 தொற்­று­நோ­யால் நிதி அள­வில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளைச் சென்­ற­டைய இரு அமைப்­பு­களும் மேற்­கொள்­ளும் மாதாந்­திர முயற்­சி­க­ளின் ஒரு பகுதி­ தான் இந்த அன்­ன­தா­னம்.

உண­வுப் பொட்­ட­லங்­களும் முறுக்­குப் பொட்­ட­லங்­களும் ஹில்­வியூ, தெம்­பனிஸ் சங்­காட், கெபுன் பாரு, கியட் ஹோங், ஜூரோங் கிரீன், மார்­சி­லிங், பூன் லே, ஹெண்­டர்­சன், ஹுவி இயோ, தெலுக் பிளாங்கா, பெக் கியோ ஆகிய 11 வட்­டா­ரங்­களில் வசிக்­கும் வசதி குறைந்த வீடு­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யப்­பட்­டன.

"உணவு விநி­யோக நட­வ­டிக்­கை­களை இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழுக்­கள் பல ஆண்­டு­க­ளாக செய்து வரு­கின்­றன. இந்த ஆண்­டில் மட்­டும் மூன்று முறை உணவு விநி­யோ­கம் செய்­தி­ருக்­கி­றோம். இதன் வழி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளு­டன் ஒரு நல்ல உறவை வளர்த்­துக்­கொள்­வ­தோடு உதவி தேவைப்­படு­வோ­ருக்கு கைகொ­டுக்க பல வாய்ப்பு­களை உரு­வாக்­கு­கி­றோம்.

"வரும் காலத்­தில் மேலும் அதி­க­மான நற்­ப­ணிச் செயற்­கு­ழுக்­கள் இணைந்து ஈடு­படும் அறப்­பணி நடவடிக்கைகளை எதிர்­பார்க்­க­லாம்," என்று தெரி­வித்­தார் மக்­கள் கழக நற்­ப­ணிப் பேர­வை­யின் தலை­வர் திரு கே. ராம­மூர்த்தி.

திரு ரவீந்­தி­ரன் கணே­ச­னின் தலை­மை­யில் ஹுவி இயோ இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு புவாங்­கோக் கிர­சென்ட் வாடகை வீடு­களுக்குச் சென்று நேற்று உணவு விநி­யோ­கம் செய்­த­னர்.

அக்­கு­ழு­வின் துடிப்­பை­யும் நல்­லெண்­ணத்­தை­யும் பாராட்ட அங் மோ கியோ குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி இங் லிங் லிங் அவ்­வி­டத்­திற்கு நேர­டி­யாக வந்­தி­ருந்­தார்.

குழு­வின் உற்­சா­கத்­தைக் கண்டு, இந்­திய சமூக அமைப்­பு­கள் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு தயங்­காது முன்­வந்து தங்­க­ளது ஆத­ர­வை­யும் அக்­க­றை­யை­யும் தரு­வது மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாக திரு­வாட்டி இங் கூறி­னார்.