புருணைக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த துணைப் பிரதமர்

புருணைக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த துணைப் பிரதமர்

1 mins read
c2552da9-d8a5-4ccb-8cfa-5da55cc0f3d4
படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

புருணை இளவரசர் அப்துல் அஸிம் அண்மையில் காலமானதை அடுத்து, சிங்கப்பூர் சார்பாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (வலமிருந்து 2வது) அந்நாட்டிற்கு நேரில் சென்று, மன்னர் ஹசனல் போல்கியாவை (இடமிருந்து 2வது) நேற்று சந்தித்து இரங்கல் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் (வலது) அவருடன் சென்றிருந்தார்.

இளையர்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கித் தருவதிலும் சமூகத்தில் வசதி குறைந்தோருக்கு உதவுவதிலும் இளவரசர் அஸிமின் அர்ப்பணிப்பை அனைவரும் அறிவர் என்று திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இளவரசர் அஸிம் சிங்கப்பூர் பள்ளியில் கல்வி பயின்றவர் என்றும் சிங்கப்பூரின் நண்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு உடலுறுப்புகள் செயலிழந்ததால் கடந்த மாதம் 24ஆம் தேதி தமது 38வது வயதில் இளவரசர் அஸிம் உயிரிழந்தார்.

குறிப்புச் சொற்கள்