இணையம் வழி வேலை பார்க்கும் பாணி அதிகரிப்பதால் நிதி நிறுவனங்களில் பாதுகாப்பு முறைகள் மேம்பட வலியுறுத்து

இணையம் வழி வேலை பார்க்கும் பாணி அதிகரிப்பதால் நிதி நிறுவனங்களில் பாதுகாப்பு முறைகள் மேம்பட வலியுறுத்து

2 mins read
1fb218a0-adb1-42f4-ad41-20c7b1d06ba0
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 சூழ­லில் பல­ரும் தொலை­வில் இருந்து வேலை பார்ப்­ப­தால் தொழில்­நுட்­பம் தொடர்­பான ஆபத்­து­கள் கூடி இருக்­கின்­றன. இதன் கார­ண­மாக நிதி நிறு­வ­னங்­கள் தங்­க­ளு­டைய பாது­காப்புக் கட்­டுப்­பாட்டு ஏற்­பா­டு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாக ஆகி இருக்­கிறது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

நிதி­ நி­று­வ­னங்­கள் எந்­தெந்த செயல்­கள் மூலம் ஆபத்­து­கள் ஏற்­ப­ட­லாம் என்­பதைக் கண்­ட­றிந்து அந்த ஆபத்­து­களைத் தவிர்த்­துக்­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்ய வேண்­டும் என்று இந்த ஆணை­யத்­தின் இணை­யப் பாது­காப்பு ஆலோ­ச­னைக் குழுவின் பரிந்­து­ரை­கள் தெரிவித்து உள்ளன.

அந்­தப் பரிந்­து­ரை­கள், இந்த ஆணை­யத்­தின் நிர்­வா­கத் துறை கூட்­டம் நவம்­பர் 5ஆம் தேதி நடந்த போது முன்­வைக்­கப்­பட்­டன.

"கொவிட்-19 கார­ண­மாக புதிய வேலைச் சூழ்­நிலை ஏற்­பட்டு இருக்­கிறது.

அத்­த­கைய ஒரு சூழ்­நி­லை­யில் இது­வ­ரை­ சிங்­கப்­பூ­ரின் நிதித்­துறை தன்­னு­டைய இணைய மற்­றும் செயல்­முறை மீள்­தி­ற­னைப் பொறுத்தவரை­ சிறப்­பா­கச் செயல்­பட்டு வந்­தி­ருக்­கிறது என்று ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­குநர் ரவி மேனன் தெரி­வித்­தார்.

"இருந்­தா­லும் இந்­தச் சூழ்­நிலை நீடிக்­கும் பட்­சத்­தில் அந்த மீள்­தி­ற­னுக்கு அதிக நெருக்­கடி ஏற்­படும். இணைய மோசடி பேர்­வ­ழி­கள் எந்தெந்த வழி­களில் கைவ­ரி­சை காட்­ட­லாம் என்­பதை ஆராய்ந்து வரு­வார்­கள் என்­பதே இதற்­குக் கார­ணம்.

"ஆகை­யால் நிதி அமைப்­பு­கள் தொடர்ந்து விழிப்­பு­டன் இருந்து இணைய மிரட்­டல்­க­ளுக்கு எதி­ராக தங்­கள் தற்­காப்பு அர­ணைப் பலப்­படுத்த வேண்­டும்," என்று அவர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, கைபேசி அல்­லது இணைய வங்கி போன்ற பரிவர்த்தனைகளில் வாடிக்­கை­யா­ளர்­களின் அடை­யா­ளங்­க­ளைச் சரி­பார்த்து தெரிந்­து­கொள்ள இன்­னும் கடு­மை­யான வழி­களை வங்­கி­களும் காப்­பு­றுதி நிறு­வ­னங்­களும் நிதி நிறு­வ­னங்­களும் நடப்­புக்கு கொண்டு வர­வேண்டி இருக்­கும் என்­று ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.

தனிப்­பட்ட ஒரு­வ­ரின் அடை­யாளத்­தைச் சரி­பார்ப்­ப­தற்­குத் தேவைப்­ப­டக்­கூ­டிய தக­வல்­கள் பற்றி ஆலோ­சனை அறிக்கை ஒன்றை ஆணை­யம் நேற்று வெளி­யிட்­டது. ஆள்­மா­றாட்ட மோசடி விவ­கா­ரங்­கள் அதி­க­ரித்து வரும் சூழ­லில் இந்த ஆலோ­ச­னை­கள் முன்­வைக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

உத்­தேச அறி­விப்­பின்­படி நிதி­நி­று­வ­னங்­க­ளுக்குச் சில அம்­சங்­கள் காட்­டா­ய­மா­கின்­றன. அதன்­படி கைபேசி அல்­லது இணைய வங்கி போன்­றவை மூலம் வாடிக்­கை­யாளர்­க­ளின் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்­தும்­போது நிதி­ நி­று­வ­னங்­கள் பயன்­ப­டுத்த வேண்­டிய தக­வல்­களை அந்த உத்­தேச அறிக்கை தெரி­விக்­கிறது.

ரக­சிய குறி­யீட்டு எண் அல்­லது சொந்த அடை­யாள எண்; ஒரு நேர ரக­சிய குறி­யீட்டு எண்; தனிப்­பட்ட ஒரு­வரை அடை­யா­ளம் காட்­டும் ரேகை முத­லான தக­வல்; தனிப்­பட்­ட­வ­ருக்­கும் நிதி­ நி­று­வ­னத்­துக்கு மட்­டும் தெரிந்த தக­வல் போன்­ற­வற்றை அவை பயன்­ப­டுத்த வேண்­டும்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து வரும் எந்­த­வொரு வேண்­டு­கோளை­யும் அல்­லது பரி­வர்த்­த­னை­யை­யும் நிறை­வேற்­று­வ­தற்கு முன் இவை அவ­சி­யம் என்று ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆணை­யத்­தின் ஆலோ­சனை அறிக்கை அதன் இணையத்­தளத்­தில் இடம்­பெற்று இருக்­கிறது. அவை பற்­றிய கருத்­து­களை டிசம்­பர் 9 வரை ஆர்­வ­முள்­ள­வர்­கள் தெரி­யப்­ப­டுத்­த­லாம்.