சமூக சேவைத்துறை மின்னிலக்கமயமாக உதவி: புரிந்துணர்வு குறிப்பில் இணையும் 4 கல்வி நிலையங்கள்

சமூக சேவைத்­துறை மின்­னி­லக்­க­ம­ய­மா­வ­தற்கு சிங்­கப்­பூ­ரின் நான்கு கல்வி நிலை­யங்­கள் உதவ இருக்­கின்­றன.

அவை இந்த ஆண்டு முடி­வில் தேவைக்கு ஏற்ற பொருத்­த­மான பயிற்­சி வகுப்புகளை நடத்தும்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­கம், சிங்­கப்­பூர் தேசிய பல்­கலைக்­க­ழ­கத்­தின் கணினி அறி­வி­யல் கழ­கம், நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூரி, லித்­தான் பயி­ல­கம் ஆகிய நான்கு கல்வி நிலை­யங்­களும் சமூக சேவை­யின் பல துறை­ க­ளி­லும் கவ­னம் செலுத்தி அத்துறை உரு­மா­று­வ­தற்கு உத­வும்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி ஃபேஸ்புக் பக்­கத்­தில் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தார்.

தேசிய சமூக சேவை மன்­றம் அந்­தக் கல்வி நிலை­யங்­க­ளு­டன் புரிந்­து­ணர்­வுக் குறிப்­பில் கையெழுத்­திட்டு இருக்­கிறது. இதன்­மூ­லம் சமூக சேவைத்­து­றை­யின் ஆற்­றல் பலப்­படும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அந்­தத் துறைக்­காக 2020 டிசம்­பர் முதல் 2023 பிப்­ர­வரி வரை மின்­னி­லக்­கப் பயிற்­சி வகுப்பு­களில் சுமார் 2,000 பேர் சேர்ந்து படிக்­க­லாம் என்று அவர் கூறி­னார்.

கடந்த செப்­டம்­பர் மாதம் தொடங்­கப்­பட்ட டெக் அண்ட் கோ (www.go.gov.sg/tng) என்ற தொழில்­நுட்ப இணைய மையத்­தைப் பயன்­படுத்­திக்கொண்டு தொடர்ந்து பல­வற்­றை­யும் கற்­றுக்­கொள்­ளும் பழக்­கத்­தைத் தழு­விக்­கொள்­ளும்­படி சமூக சேவை அமைப்­பு­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

மின்­னி­லக்­கப் பயிற்­சி வகுப்பு­களில் சேர்­வது பற்றி பரி­சீ­லிக்­கும்­படியும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

புதிய பயிற்­சி வகுப்பு­கள் சேவைத்­து­றையை பெரிய அள­வில் உரு­மாற்­றம் செய்­யும். அந்­தத் துறை­யின் இலக்கு நிறை­வேற உத­வும்.

கடப்­பா­டு­மிக்க சமூ­கச் சேவை நிபு­ணர்­க­ளால் இயக்­கப்­படும் ஒரு துறை­யா­கத் திகழ்­வதும் தொண்­டூ­ழி­யர்­கள் நிறைந்த, தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்­து­கின்ற, மூலா­தார நிலை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளைக் கொண்ட ஒரு துறை­யாக திகழ வேண்­டும் என்­பதும் இத்­து­றை­யின் இலக்கு.

இந்த இலக்கு நிறை­வேற புதிய பயிற்­சி வகுப்பு­கள் உத­வும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!