சிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு தொற்று; உள்ளூரில் புதிய சம்பவங்கள் இல்லை

சிங்கப்பூரில் மேலும் 18 பேருக்கு தொற்று; உள்ளூரில் புதிய சம்பவங்கள் இல்லை

1 mins read
95ebfb07-06c9-490a-8714-3d0c782f8a53
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இன்று (நவம்பர் 11) 18 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடன் சேர்த்து, இங்கு கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,091ஆக உயர்ந்தது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். சிங்கப்பூர் வந்ததும் அவர்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களில் இருவர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்; 14 பேர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

அந்த 14 பேரில் 10 பேர் வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்கள்.

சமூகத்திலோ, ஊழியர் தங்கும் விடுதியிலோ பாதிப்பு இல்லை.

கொரோனா கிருமித் தொற்று கண்டவர்கள் சென்ற இடங்களாக பூகிஸ் ஸ்திரீட், முஸ்தபா சென்டர், ஜூரோங் பாயிண்ட், கிட்சனர் காம்ப்ளெக்ஸ் ஆகிய புதிய இடங்களை நேற்று அமைச்சு அறிவித்தது.

கொவிட்-19 கிருமித் தொற்றுள்ளோர் சென்ற இடங்களின் விவரங்களை சுகாதார அமைச்சின் இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.