சிங்கப்பூரின் பொதுத் துறை கட்டமைப்பு 2021ல் மறுவடிவமைக்கப்படும்

சிங்கப்பூரின் பொதுத் துறை கட்டமைப்பு 2021ல் மறுவடிவமைக்கப்படும்

2 mins read
fa873f1e-e597-45ce-9016-fa5a0dcda0a5
-

மக்­க­ளின் தனிப்­பட்ட தக­வல்­களைப் பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­களின் ஒரு பகு­தி­யாக, சிங்­கப்­பூ­ரின் பொதுத் துறை தக­வல் தொழில்­நுட்பக் கட்டமைப்பின் மறு­வடி­வ­மைப்பு அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

எடுத்­துக்­காட்­டாக, அர­சாங்க ஊழி­யர்­கள் வேலை­யி­லி­ருந்து வில­கி­ய­வு­டன் பயன்­பாட்­டில் இல்­லாத பய­னா­ளர் கணக்­கு­கள் தானா­கவே நீக்­கப்­படும். தற்­போது இந்த நடை­முறை தானி­யக்க முறை­யில் இல்லை.

கடந்த ஈராண்­டு­களில் பல ஊடு­ரு­வல் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­த­தைத் தொடர்ந்து, பொதுத் துறை தக­வல் பாது­காப்பு மறு­ஆய்­வுக் குழு முன்­மொ­ழிந்­துள்ள 24 பரிந்­து­ரை­களில் மேற்­கூ­றப்­பட்ட இந்­தத் தானி­யக்க நட­வ­டிக்­கை­யும் ஒன்று.

மற்ற நட­வ­டிக்­கை­களில் ஒன்­றாக, அபா­யத்தை ஏற்­ப­டுத்­தும் பய­னா­ளர்­க­ளின் நடத்­தை­யைக் கண்­ட­றிந்து அதை நிறுத்த, தொழில்­நுட்ப மற்­றும் செயல்­மு­றைக் கட்­டுப்­பாடு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

தக­வல்­களை அனுப்­பும்­போது முக்­கிய தக­வல்­கள் தங்­களை அறி­யா­மல் கசி­வ­தைத் தடுக்க, தக­வல்­களை அனுப்­பு­வ­தற்கு முன் பய­னா­ளர்­க­ளுக்கு அது குறித்து ஒரு­முறை நினை­வு­ப­டுத்­தப்­படும்.

சிங்­கப்­பூர் கணக்­கி­யல் ஆணை­யத்­தில் கடந்த ஆண்டு தனிப்­பட்ட தக­வல்­கள் கசிந்­த­தைத் தொடர்ந்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆணை­யத்­தைச் சேர்ந்த அதி­காரி ஒரு­வர், 22 அமைப்­பு­க­ளைச் சேர்ந்த 41 பேரி­டம் அனுப்­பிய மின்­னஞ்­சல்­களில், 6,541 தனி­ந­பர்­க­ளின் தொடர்பு விவ­ரங்­களும் தேர்வு முடி­வு­களும் அடங்­கிய கோப்பு ஒன்­றைத் தமக்­குத் தெரி­யா­மல் இணைத்­து­விட்­டார்.

2023ஆம் ஆண்டு இறு­திக்­குள் மேற்­கூ­றப்­பட்ட 24 பரிந்­து­ரை­க­ளைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் திட்­ட­மிட்­ட­படி நடை­பெற்று வரு­வ­தாக அறி­வார்ந்த தேச, மின்­னி­லக்க அர­சாங்க அலு­வ­ல­கம் நேற்று முதன்­மு­றை­யாக வெளி­யிட்ட வரு­டாந்­திர அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

இது­நாள் வரை அவற்­றில் 18 பரிந்­து­ரை­களை அது நடை­மு­றைப்­ப­டுத்தி உள்­ளது. ஒரு சில நட­வ­டிக்­கை­களை அடுத்த ஆண்­டு­தான் செயல்­ப­டுத்த முடி­யும் என்று குறிப்­பிட்ட அலு­வ­ல­கம், அதற்­கான கார­ணத்­தை­யும் விளக்­கி­யது.

"இவை பெரி­தான, சிக்­க­லான திட்­டங்­கள். இவற்­றைச் செயல்­படுத்த தொழில்­நுட்ப முறை குறிப்­பி­டத்­தக்க அளவு மறு­வ­டி­வ­மைக்­கப்­பட வேண்­டும் என்­ப­தால் அதற்­கான அவ­கா­சம் தேவைப்­ப­டு­கிறது," என்று அது விவ­ரித்­தது.

எடுத்­துக்­காட்­டாக, பொதுத் துறை தக­வல் தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்த பய­னா­ளர்­களுக்கு அனு­மதி வழங்­கும் அல்­லது ரத்து செய்­யும் தானி­யக்க முறை 2,000 தக­வல் தொழில்­நுட்­பக் கட்­ட­மைப்­பு­கள் அனைத்­தி­லும் 2024ஆம் ஆண்டு இறு­திக்­குள்­தான் முழு­மை­யாக செயல்­ப­டுத்­தப்­படும்.

அது­வரை, பயன்­பாட்­டில் இல்­லாத பய­னா­ளர் கணக்­கு­களை உட­னுக்­கு­டன் நீக்­கு­வது குறித்து சம்­பந்­தப்­பட்ட அமைப்­பு­க­ளி­டம் தெரி­யப்­ப­டுத்த தொழில்­நுட்ப முறை ஒன்று பயன்­ப­டுத்­தப்­படும்.

மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது