ஃபேர்பிரைஸ்: பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் திட்டம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு

ஃபேர்பிரைஸ்: பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டணம் விதிக்கும் திட்டம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிப்பு

2 mins read
f0eeb944-5822-4b2f-a0a6-d9564fcabaeb
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் நிறு­வ­னம், தேர்­ந்தெ­டுக்­கப்­பட்ட அதன் கடை­களில் பிளாஸ்­டிக் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிக்­கும் திட்­டத்தை இன்று முதல் மேலும் ஓராண்­டிற்கு நீட்­டிக்­க­வி­ருக்­கிறது.

வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் இருந்து இது குறித்து நல்ல வர­வேற்பு கிடைத்­த­தைத் தொடர்ந்து இத்­திட்­டத்தை நீட்­டிக்க முடி­வெ­டுத்­தி­ருப்­ப­தாக அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

கடந்த ஆண்டு நவம்­ப­ரில் இத்­திட்­டம் தொடங்­கி­யதை அடுத்து, இது­வரை மொத்­தம் 15.6 மில்­லி­யன் பிளாஸ்­டிக் பைகள் சேமிக்­கப்­பட்­ட­தாக ஃபேர்பி­ரைஸ் கூறி­யது. இந்­தத் திட்­டத்­தில் 25 கடை­கள் இணைந்து இருந்­தன.

ஃபேர்பி­ரைஸ், ஃபேர்பி­ரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பி­ரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்­கா­டி­களில் பிளாஸ்­டிக் பைகள் தேவைப்­ப­டு­வோர் ஒவ்­வொரு பரி­வர்த்­த­னைக்­கும் 20 காசு செலுத்த வேண்­டும்.

சியர்ஸ், ஃபேர்பி­ரைஸ் எக்ஸ்­பி­ரஸ் பல்­பொ­ருள் அங்­கா­டி­களில் ஒவ்­வொரு பரி­வர்த்­த­னைக்­கும் 10 காசு செலுத்த வேண்­டும்.

"இந்­தத் திட்­டத்­தில் பங்­கேற்­கும் பேரங்­கா­டி­களில் பொருட்­களை வாங்­கும் 10ல் ஏழு வாடிக்­கை­யா­ளர்­கள், தங்­க­ளது சொந்த பைக­ளைக் கொண்டு வரு­கின்­ற­னர் அல்­லது பிளாஸ்­டிக் பைக­ளைப் பெற மறுக்­கின்­ற­னர். பல்­பொ­ருள் அங்­கா­டி­க­ளைப் பொறுத்­த­வரை, 10ல் ஒன்­பது பேர் அவ்­வாறு செய்­கின்­ற­னர்," என்று ஃபேர்பி­ரைஸ் கூறி­யது.

பிளாஸ்­டிக் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிக்­கும் திட்­டம் மூலம் கடந்த ஆண்டு பெறப்­பட்ட $600,000, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் சமூ­கப் பணி­க­ளுக்கு நன்­கொடை அளிக்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"கடந்த ஓராண்டு காலத்­தில் குறிப்­பி­டத்­தக்க அளவு பிளாஸ்­டிக் பைகள் சேமிக்­கப்­பட்டு இருப்­பது, சுற்­றுச்­சூ­ழல் மீது பொது­மக்­கள் கொண்­டி­ருக்­கும் விழிப்­பு­ணர்­வைக் காட்­டு­கிறது," என்று ஃபேர்பி­ரைஸ் குழு­மத்தின் தலைமை நிர்­வாக அதிகாரி சியா கியான் பெங் கூறி­னார்.

ஃபேர்பி­ரைஸ், ஃபேர்பி­ரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பி­ரைஸ் எக்ஸ்ட்ரா ஆகிய 11 பேரங்­கா­டி­களும் 12 சியர்ஸ் கடை­களும் ஒரு ஃபேர்பி­ரைஸ் எக்ஸ்­பி­ரஸ் கடை­யும் பிளாஸ்­டிக் பைக­ளுக்­குக் கட்­ட­ணம் விதிக்­கும் திட்­டத்­தில் இன்று முதல் பங்­கேற்­கின்­றன.