லோர்னி ரோடு பூங்கா இணைப்புப் பாதை விரைவில் திறக்கப்படும்

லோர்னி ரோடு பூங்கா இணைப்புப் பாதை விரைவில் திறக்கப்படும்

1 mins read
ea6d67df-aa1d-479b-bfc8-e742aa14bd95
லோர்னி ரோடு பூங்கா இணைப்புப் பாதை இன்னும் ஒரு சில வாரங்களில் தயாராகிவிடும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மெக்­ரிட்சி நீர்­த்தேக்க கார் நிறுத்து­மி­டத்­தை­யும் கியம் ஹோக் பூங்­கா­வை­யும் இணைக்­கும் 2 கிலோ மீட்­டர் நீள லோர்னி ரோடு பூங்கா இணைப்­புக்­கான கட்­டு­மா­னப் பகு­தி­கள் இன்­னும் ஒரு சில வாரங்­களில் முடி­வு­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2011ஆம் ஆண்டு லோர்னி ஹைவே திட்­டம் அறி­விக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இந்­தப் பூங்கா இணைப்புப் பாதை கட்­டப்­பட்டு வந்­தது.

இவ்­வாண்டு கொவிட்-19 நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டம் நடப்­பில் இருந்­த­தால், பூங்கா இணைப்புப் பாதைக்­கான கட்­டு­மா­னப் பணி­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

முன்­ன­தாக, லோர்னி ஹைவே திட்­டத்தை நிர்­வ­கித்த ஒப்­பந்த நிறு­வ­னம் நிதி பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­ய­தால், பூங்கா இணைப்­புப் பாதையின் கட்­டு­மா­னப் பணிகள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவ்­வாண்டு இறு­திக்­குள் இத்­திட்­டத்தை முடிக்க தாம் பணி­யாற்றி வரு­வ­தாக தேசிய பூங்­காக் கழ­கம் கூறி­யுள்­ளது.