'பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்'

'பரிவுமிக்க, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும்'

2 mins read
82080ba1-08f0-41fd-a8c0-a051c77e5268
படம்: MASAGOS ZULKIFLI/FACEBOOK -

கொவிட்-19 கால­கட்­டத்­தை­யும் தாண்டி மேலும் பரி­வு­மிக்க, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய ஒரு சமூ­கத்தை எப்­படி உரு­வாக்­க­லாம் என்­பது குறித்து உடற்­கு­றை­யுள்ள 120 பேர் முன்­வந்து தங்­க­ளின் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­னர். சிங்­கப்­பூர் தற்­போது சந்­தித்து வரும் சவால்­கள், ஏற்­பட்­டுள்ள புதிய வாய்ப்­பு­கள், நெருக்­க­டி­யி­லிருந்து மேலும் வலிமை பெற்று மீண்­டு­வ­ரு­வ­தற்­கான தீர்­வு­கள் ஆகி­யவை குறித்து மக்­க­ளு­டன் கலந்­தா­லோ­சிக்க அர­சாங்­கம் 'மேலும் வலிமை பெற்று எழு­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல் தொடர்' திட்­டத்­தைத் தொடங்­கி­யது.

இதன் ஒரு பகு­தி­யாக உடற்­குறை­யு­டைய சமூ­கத்­தி­ன­ரு­டன் கடந்த வாரக் கலந்­து­ரை­யா­டல் நடத்­தப்­பட்­டது.

2017ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்­டு­வரை உடற்­கு­றை­யுள்ள சமூ­கத்­தி­ன­ருக்­கான தேசிய அள­வி­லான திட்­டங்­களை வழி­நடத்தி வரு­கிறது மூன்­றா­வது துணை­பு­ரி­யும் பெருந்­திட்­டம்.

சிறப்­புத் தேவை­கள் உடை­ய­வர்­கள், அவர்­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் ஆகி­யோ­ரது வாழ்க்­கை­யின் வெவ்­வேறு கட்­டத்­தில் தகுந்த உதவி வழங்­கு­வதை இலக்­கா­கக் கொண்­டுள்­ளது இப்­பெ­ருந்­திட்­டம்.

பெருந்­திட்­டத்­தின்­கீழ் இயங்கி வரும் இரண்டு பணிக்­கு­ழுக்­களில் தலை­வர்­க­ளாக உள்ள சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, ஜாலான் புசார் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் டெனிஸ் புவா, முன்­னாள் நிய­மன உறுப்­பினர் சியா யோங் யோங் ஆகி­யோ­ரு­டன் இக்­க­லந்­து­ரை­யா­டல் நடந்­தே­றி­யது.

வாழ்­நாள் கற்­றல் வாய்ப்­பு­கள், தொழில் பாதை­கள் ஆகி­ய­வற்றை எளி­தில் நாடு­வது குறித்து இரண்டு பணிக்­கு­ழுக்­களும் ஆராய்ந்து வரு­கின்­றன. அத்­து­டன் சிறப்­புத் தேவை­க­ளு­டை­ய­வர்­கள் தன்­னிச்­சை­யாக செயல்­பட, வீடு­க­ளி­லும் சமூ­கத்­தி­லும் உள்ள தொழில்­நுட்ப, வடி­வ­மைப்பு அம்­சங்­க­ளைப் பணிக்­கு­ழுக்­கள் மதிப்­பி­ட­வும் செய்­யும்.

கொவிட்-19க்குப் பிந்­திய காலத்­தில் மேலும் பரி­வு­டைய, அனை­வரை­யும் உள்­ள­டக்­கிய சிங்­கப்­பூரை எவ்­வாறு உரு­வாக்­க­லாம் என்­பது குறித்­துப் பய­னுள்ள கருத்­து­கள் பேசப்­பட்­ட­தாக திரு மச­கோஸ் தம் ஃபேஸ்புக் பதி­வில் நேற்று குறிப்­பிட்­டார்.

உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள், அவர்­களின் குடும்ப உறுப்­பி­னர்­கள், நண்­பர்­கள், உடற்­குறை மைய­மாக இயங்கி வரும் சமூ­கச் சேவை அமைப்­பி­னர் ஆகி­யோர் கொள்ளை­நோய் சூழ­லில் தங்­க­ளின் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­தை­யும் திரு மச­கோஸ் சுட்­டி­னார்.

கொவிட்-19க்குப் பிந்­திய சிங்­கப்­பூ­ரில் எத்­த­கைய வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­பது குறித்­தும் அவர்­கள் பேசி­யி­ருந்­த­னர்.

பணிக்­கு­ழுக்­கள் சமர்ப்­பிக்­கும் திட்­டங்­க­ளைப் பின்­னா­ளில் நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது தங்­க­ளை­யும் ஈடு­ப­டுத்­து­மாறு சிலர் ஆர்­வத்­து­டன் தெரி­வித்­த­தாக அமைச்­சர் மச­கோஸ் கூறி­னார்.

"தங்­க­ளின் ஆற்­றலை வெளிப்­படுத்­த­வும் அர்த்­த­முள்ள நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வும் உடற்­கு­றை­யுள்­ள­வர்­கள் உந்­து­தல் பெற வேண்­டும். அதற்கு, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் ஒரு சமூ­கம் உரு­வாக நமது கொள்­கை­களை மெரு­கேற்ற வேண்­டும். தொடர்ந்து புதிய திட்­டங்­களை உரு­வாக்க வேண்­டும். இவற்­றுக்­கெல்­லாம் உரை­யா­ட­லில் பகி­ரப்­பட்ட அவர்­க­ளின் யோச­னை­களும் கருத்­து­களும் கைகொ­டுக்­கும்," என்­றார் திரு மச­கோஸ்.