தீபாவளி உணர்வை ஊட்டிய 'புரோஜெக்ட் ஹேப்பினஸ்'

தீபாவளி உணர்வை ஊட்டிய 'புரோஜெக்ட் ஹேப்பினஸ்'

2 mins read
6b7ecebe-518e-4f77-bf0b-7331d7e5fa3a
திருவாட்டி கோமதியின் இரு மகள்களுடன் ரங்கோலி கோலமிடும்(இடமிருந்து) டாக்டர் டான் வூ மெங், மூத்த அமைச்சர் திரு தர்மன், ஜாமியா அமைப்பின் மூத்த துணைத் தலைவர் டாக்டர் சலீம், டான் சின் துவான் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகஅதிகாரி திருவாட்டி யாப் சூ யின். படம்: திமத்தி டேவிட் -

குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பம் ஒன்­றின் வீட்­டில் தீபா­வளி உணர்வை ஏற்­ப­டுத்தி உற்­சா­கத்­தைக் கொடுத்­துள்­ளது ஜாமி­யா­வின் 'புரோ­ஜெக்ட் ஹேப்­பி­னஸ்' திட்­டம்.

நோன்­புப் பெரு­நாள், கிறிஸ்­து­மஸ், தீபா­வளி, சீனப் புத்­தாண்டு போன்ற பண்­டி­கை­க­ளின்­போது எல்­லாச் சம­யங்­க­ளை­யும் சேர்ந்த வரு­மா­னம் குறைந்த குடும்­பங்­களுக்கு உதவி, பண்­டி­கைக்­கா­லத்­தில் அவ­ர­வர் மன­நி­றை­வோ­டும் மகிழ்ச்­சி­யோ­டும் கொண்­டாட இந்த மகிழ்­வுத் திட்­டம் வழி­வ­குக்­கிறது.

தாருல் இஸ்லா எனப்­படும் ஜாமியா மறு­வாழ்வு இல்­லத்­தின் குடி­யி­ருப்­பா­ளர்­கள், இன, சமய நல்­லி­ணக்­கத்­தைப் பேணும் வகை­யில் இது­போன்ற தொண்­டூ­ழி­யப் பணி­களில் தங்­களை ஈடு­ப­டுத்தி மற்­ற­வரை மகிழ்­வித்து அதில் மகிழ்ச்சி காண்­கின்­ற­னர். இந்த ஆண்டு தீபா­வ­ளிக்கு, வச­திக்­கு­றைந்த ஐந்து குடும்­பங்­கள் பரிந்­து­ரைக்­கப்­பட்­டன. அவற்­றில் திரு­வாட்டி கோமதி சோம­சுந்­த­ரத்­தின் குடும்­ப­மும் ஒன்று. அவ­ரது வீட்­டின் நிலை, அவ­ரின் தேவை­கள் ஆகி­ய­வற்­றின் அடிப்­ப­டை­யில் அவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

திரு­வாட்டி கோம­தி­யின் வீட்­டைப் பார்­வை­யிட்ட டாருல் இஸ்லா குழு­வி­னர், ஒரே வாரத்­தில் வீட்­டுக்­குச் சாயம் பூசி, சுத்­தப்­ப­டுத்தி, பழு­தான மின்­சா­த­னப் பொருள்­களுக்­குப் பதி­லாக புதுப் பொருள்­களைப் பொருத்­தி­னர். புதிய சோபா, நாற்­கா­லி­க­ளு­டன் வீட்­டுக்­குப் புதுப்­பொ­லிவு தர உத­விக்­க­ரம் நீட்­டி­னர்.

புதுப்­பொ­லிவு பெற்ற வீட்டை நேற்று திரு­வாட்டி கோம­தி­யி­டம் ஒப்­ப­டைத்­த­போது சிறப்பு விருந்­தி­ன­ராக மூத்த அமைச்­ச­ரும் சமு­தா­யக் கொள்­கை­க­ளுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் திரு தர்­மன் சண்­மு­க­ரத்­தி­னம் வரு­கை­ய­ளித்­தி­ருந்­தார். அவ­ரு­டன் ஜூரோங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் டாக்­டர் டான் வூ மெங்­கும் இருந்­தார்.

தீபா­வ­ளியை முன்­னிட்டு வீட்டை அலங்­க­ரிப்­பது இதுவே முதல் முறை என்று பகிர்ந்­து­கொண்­டார் திரு­வாட்டி கோமதி. இந்­தத் திட்­டத்­தால் திரு­வாட்டி கோம­திக்கு பண்­டிகை உணர்வு பிறக்­கும் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ள­னர் டாருல் இஸ்லா குழு­வி­னர்.