மெய்நிகர் ஆசியான் மாநாடு தொடக்கம்; வட்டாரத் தலைவர்கள் சந்திப்பு

மெய்நிகர் ஆசியான் மாநாடு தொடக்கம்; வட்டாரத் தலைவர்கள் சந்திப்பு

1 mins read
6cd895db-ef25-4d26-8a97-ec89376323ec
ஹனோயில் காணப்படும் பதாகைகள். படம்: இபிஏ -

இன்று ஆசி­யான் மாநாடு தொடங்கு­கிறது. மெய்­நி­க­ராக நடை­பெ­ற­உள்ள இம்­மா­நாட்­டில் பிர­த­மர் லீ சியன் லூங், வட்­டார நாடு­க­ளின் தலை­வர்­க­ளைச் சந்­தித்துப் பேசவுள்ளார்.

பல ஆண்­டு­க­ளாக நடந்­து­வ­ரும் பேச்­சு­வார்த்­தையை அடுத்து, 'வட்­டார நிலை­யி­லான விரி­வான பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வம்' வர்த்­தக ஒப்­பந்­தம் வரும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று கையெ­ழுத்­தா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தியா சென்ற ஆண்டு இந்த ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து வில­கிக்­கொண்­டது. இருப்­பி­னும், அனைத்­தும் கைகூடி வந்­தால் உல­கின் ஆகப்­பெ­ரிய வர்த்­தக ஒப்­பந்­த­மாக இது அமைந்­தி­டும் என்­றம் கூறப்­ப­டு­கிறது.

ஆசி­யா­னின் 10 உறுப்பு நாடு­களு­டன் இந்த ஒப்­பந்­தத்­தில் மொத்­தம் 15 நாடு­கள் கையெ­ழுத்­தி­டும். இந்த 15 நாடு­களும் உல­கின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யின் மூன்­றில் ஒரு பங்­குக்­கு­ரி­யவை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கொள்ளை நோய்ச் சூழ­லி­லிருந்து நாடு­கள் மீண்­டு­வ­ரு­வ­தற்­கான ஆசி­யான் விரி­வான மீட்­புக் கட்­ட­மைப்­பும் வட்­டார நாடு­க­ளின் மருத்­து­வப் பொருட்­க­ளின் இருப்­பும் அதி­கா­ர­பூர்­வ­மாக மாநாட்­டில் தொடங்கி வைக்­கப்­படும் என்­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­டுள்ள பொதுச் சுகா­தார, சமூ­கப் பொரு­ளி­யல் சவால்­க­ளைப் பற்றி வட்­டார நாடு­க­ளின் தலை­வர்­கள் கலந்­தா­லோ­சிப்­ப­து­டன் மீண்டு வரு­வ­தற்­கான பாதை­யை­யும் திட்­ட­மி­டு­வர் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று வெளி­யிட்ட அறிக்கை கூறி­யது.

ஈராண்­டுக்கு ஒரு­முறை நடை­பெ­றும் ஆசி­யான் மாநாட்­டுக்கு இவ்­வாண்டு வியட்­னாம் தலைமை ஏற்­றுள்­ளது.