குளிரூட்டி வண்டியில் வலம்வரும் 'ஃபேர்பிரைஸ்'

குளிரூட்டி வண்டியில் வலம்வரும் 'ஃபேர்பிரைஸ்'

1 mins read
36bf9524-00e1-4fca-8e45-18be46df4ab9
புளோக் 518, வெஸ்ட் கோஸ்ட் ரோட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஃபேர்பிரைஸ் குளிரூட்டி வண்டி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பழங்­கள், காய்­க­றி­கள், உறைந்த உண­வு­ வ­கை­கள் உட்­பட சுமார் 200 வகை மளி­கைப் பொருட்­க­ளைத் தாங்­கி­ய­படி 'ஃபேர்பி­ரைஸ்' குளி­ரூட்டி வண்டி ஒன்று ஞாயிற்­றுக்­கி­ழமை வரை இயங்­க­வுள்­ளது.

கிருமி முறி­ய­டிப்­பு காலத்­தில் 'ஃபேர்பி­ரைஸ் ஒன் வீல்ஸ்' திட்­டம் நடப்­புக்கு வந்­தது. மூத்த குடி­மக்­கள் அதி­கம் உள்ள ஐந்து வட்­டா­ரங்­களில் மளி­கைப் பொருட்­கள் கொண்ட ஐந்து வேன்­கள் வலம்­வந்­தன.

இதை­ய­டுத்து, புளோக் 108 புக்­கிட் பெர்­மாய் ரோடு, புளோக் 32 தெலுக் பிளாங்கா ரைஸ், புளோக் 518 வெஸ்ட் கோஸ்ட் ரோடு ஆகிய வட்­டா­ரங்­களில் ஃபேர்பி­ரை­சின் முதல் குளி­ரூட்டி வச­தி­யு­டைய வண்டி இயங்­க­வி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் இறைச்சியையும் பால்­வ­கைப் பொருட்­களையும் விற்­பனை செய்ய முடி­யும். ஃபேர்பி­ரைஸ் கடை­கள் போலவே கடன் அட்டை, வங்கி அட்டை, ரொக்­கம் ஆகிய கட்­டண முறை­கள் இத்­திட்­டத்­தின் கீழ் ஏற்­றுக்­கொள்­ளப்­படும்.