கலக்கத்திலிருந்து மீண்டு களிப்புடன் தீபாவளி

கலக்கத்திலிருந்து மீண்டு களிப்புடன் தீபாவளி

1 mins read
1e04e595-ecab-46c7-8e6b-c42da3a3b826
நோயால் துவண்ட 2019ஆம் ஆண்டை வெற்றிகரமாக எதிர்கொண்டு, புதிய மனிதராக புது நம்பிக்கையுடன் இவ்வாண்டின் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடக் காத்திருக்கும் பிரபு - கலைச்செல்வி தம்பதியர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

கடந்த ஆண்டின் தீபாவளி கொண்டாட்டத்தை திரு க.பிரபு நாயுடு வாழ்நாளில் மறந்திட இயலாது.

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவாறு தீபாவளியை வழக்கம் போல கொண்டாட முனைந்தனர்.

நீரிழிவு பிரச்சினையுள்ள திரு பிரபுவுக்கு மூன்றாம் கட்ட மலக்குடல் வாய்ப் புற்றுநோயுடன் கட்டி ஒன்றையும் அப்பகுதியிலிருந்து அகற்றும் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

"மனதில் போராட்டம். அதிர்ச்சி, ஏமாற்றம், எதிர்காலத்தைப் பற்றிய கவலை என ஒரே சமயம் உணர்ச்சிகள் தாக்கின. இதுதான் எனது கடைசி தீபாவளியா என்ற கலக்கம்," என்று தாம் அனுபவித்த வேதனையை நினைவுகூர்ந்தார் திரு பிரபு.

நோயால் துவண்ட 2019ஆம் ஆண்டை வெற்றிகரமாக எதிர்கொண்டு, புதிய மனிதராக புது நம்பிக்கையுடன் இவ்வாண்டின் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடக் காத்திருக்கும் பிரபு - கலைச்செல்வி தம்பதியர் எதிர்கொண்ட சவால்களைத் தெரிந்துகொள்ள தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!