$2 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருள்கள் சிக்கின

$2 மில்லியன் மதிப்புடைய போதைப்பொருள்கள் சிக்கின

3 mins read

கடந்த 19 ஆண்­டு­களில் இல்­லாத வகை­யில், ஆகப் பெரிய அள­வாக 14.1 கிலோ ஹெரா­யின் போதைப்­பொ­ருளை மத்­திய போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு கைப்­பற்றி இருக்­கிறது.

இந்த நட­வ­டிக்­கை­யின்­போது, குறிப்­பி­டத்­தக்க அள­வில் மற்ற போதைப்­பொ­ருள்­களும் சிக்­கின.

கடந்த புதன்­கி­ழமை அதி­கா­ரி­கள் பல்­வேறு இடங்­களில் நடத்­திய சோத­னை­களில் 2.8 கிலோ 'ஐஸ்', 7.5 கிலோ கஞ்சா, 323 கிராம் 'எக்ஸ்­டசி' துண்டுகள், 28 'எக்ஸ்­டசி' மாத்­தி­ரை­கள், 1,008 எரி­மின்-5 மாத்­தி­ரை­கள், $12,629 ரொக்­கம் முத­லி­யவை கைப்­பற்­றப்­பட்­டன.

இவற்­றின் மொத்த மதிப்பு $2 மில்­லி­ய­னாக இருக்­க­லாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சந்­தே­கத்­தின் பேரில் 29 முதல் 55 வய­துக்­குட்­பட்ட ஆட­வர் மூவ­ரும் பெண்­கள் இரு­வ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சிக்­லப் சாலை­யில் போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் கடந்த புதன்­கி­ழமை பிற்­ப­க­லில் ஒரு வாக­னத்தை இடை­ம­றித்து, 55 மற்­றும் 50 வய­து­டைய ஆட­வர் இரு­வ­ரை­யும் 52 வய­தான பெண் ஒரு­வ­ரை­யும் கைது செய்­த­னர். அம்­மூ­வ­ரும் சிங்­கப்­பூ­ரர்­கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவ்­வா­க­னத்­தைச் சோத­னை­யிட்­ட­போது, மூன்று கட்­டு­களில் கிட்­டத்­தட்ட 1,453 கிராம் ஹெரா­யின் இருந்­ததை அதி­கா­ரி­கள் கண்டு­பி­டித்­த­னர்.

அத்­து­டன், அந்த 50 வயது ஆட­வ­ரி­டம் மூன்று கிராம் ஹெரா­யி­னும் இரண்டு கிராம் 'ஐஸ்' போதைப்­பொ­ரு­ளும் இருந்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டன.

பின் அந்­தப் பெண்ணை சிக்­லப் சாலை­யில் அவர் மறைந்­து இ­ருந்த இடத்­திற்கு அழைத்­துச் சென்று சோத­னை­யிட்ட அதி­காரி­கள், அங்கு பதுக்கி வைக்­கப்­பட்டு இ­ருந்த 11 கிராம் ஹெரா­யின், இரண்டு கிராம் 'ஐஸ்', ஒரு 'எக்ஸ்­டசி' மாத்­திரை, ஒரு எரி­மின்-5 மாத்­திரை ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­னர்.

அதே நாளில் இடம்பெற்ற மற்றோரு நடவடிக்கையில், போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரி­வின் இன்­னோர் அதி­கா­ரி­கள் குழு, பிடோக் ரெசர்­வோர் சாலைக்கு அருகே உள்ள ஒரு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக்­கில் இருந்து 35 வயது ஆட­வர் ஒரு­வ­ரின் நடமாட்டத்தைச் சிறிது நேரம் கண்காணித்த பிறகு, அவரைக் கைது செய்தது.

ஏறத்­தாழ 2,782 கிராம் ஹெரா­யின் அடங்­கிய ஆறு கட்­டு­கள், 127 கிராம் 'ஐஸ்', ஐந்து பொட்­ட­லங்­களில் இருந்த 323 கிராம் 'எக்ஸ்­டசி' துண்டுகள், $629 ரொக்­கம் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் பறி­முதல் செய்­த­னர்.

பின்­னர் அதே புளோக்­கில் இருந்த அவ­ரது வீட்­டைச் சோதனை செய்த அதி­கா­ரி­கள், அங்­கி­ருந்த 8.96 கிராம் ஹெரா­யின், 1.95 கிராம் 'ஐஸ்', 2.5 கிலோ கஞ்சா, 1,007 எரி­மின்-5 மாத்­தி­ரி­ர­கள், ஏழு 'எக்ஸ்­டசி' மாத்­தி­ரை­கள், $12,000 ரொக்­கம் ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­னர்.

அவ்வீட்டில் இருந்த 29 வயது பெண் கைது செய்யப்பட்டார். அவர் நிரந்தரவாசத் தகுதி பெற்றவர் எனச் சொல்லப்பட்டது.

பின்­னர் அந்த 35 வயது ஆட­வரை அவ­ரது வாக­னத்­திற்கு அழைத்­துச் சென்று சோத­னை­யிட்ட போது, அதில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த 944 கிராம் ஹெராயின், 763 கிராம் 'ஐஸ்', 5.05 கிலோ கஞ்சா ஆகிய போதைப்­பொ­ருள்­களும் பிடி­பட்­டன.

இச்­சம்­ப­வங்­கள் குறித்த விசா­ரணை தொடர்­வ­தாக போதைப்­பொருள் ஒழிப்­புப் பிரிவு தெரி­வித்­தது.

எவ­ரே­னும் 15 கிரா­முக்கு மேல் தூய ஹெரா­யின் வைத்­தி­ருந்­த­தாகக் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால், போதைப்­பொ­ருள் ஒழிப்­புச் சட்­டத்­தின்­படி அவ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.