வர்த்தகம், இணைப்புத்திறன், நீடித்த நிலைத்தன்மை, நவீன சேவைகள் எனப் பல துறைகளில் சிங்கப்பூரும் சீனாவின் ஷண்டோங் மாநிலமும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று வெளியுறவு, போக்குவரத்து மூத்த அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலிலும் சிங்கப்பூர்-ஷண்டோங் இடையிலான இருதரப்பு வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து இருக்கிறது என்று சிங்கப்பூர் - ஷண்டோங் வர்த்தக மன்றத்தின் இணைத் தலைவருமான திரு சீ கூறினார்.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிங்கப்பூர்-ஷண்டோங் இடையே $4.86 பில்லியன் அளவிற்கு வர்த்தகம் நடந்துள்ளது என்றும் ஆண்டு அடிப்படையில் இது 117% வளர்ச்சி என்றும் மெய்நிகர் முறையில் இடம்பெற்ற 22வது வர்த்தக மன்றக் கூட்டத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
ஷண்டோங் மாநிலத்தில் 70 திட்டங்களில் சிங்கப்பூர் செய்துள்ள அந்நிய நேரடி முதலீடு கடந்த ஆண்டில் 750 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

