'என்டோ இன்டஸ்ட்ரிஸ்' என்ற உள்நாட்டு நிறுவனம், விரயமாகும் உணவுப்பொருள்களை விலங்கு உணவாக மாற்றவும் உரமாக்கி உள்ளூர் பண்ணைகளுக்கு விநியோகிக்கவும் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது.
அந்த நிறுவனம் ஒருவகைச் சிற்றினத்தைச் சேர்ந்த ஈக்கள், விரயமாகும் உணவை உண்ணும்படி செய்கிறது.
அதன்மூலம் உருவாகக்கூடிய பொருள் பண்ணைகளுக்கு மிக முக்கியமானவையாக இருக்கின்றன.
சிங்கப்பூரில் உணவு விரயம் கடந்த பத்து ஆண்டுகளில் 30% அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 736,000 டன் உணவு விரயமானது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது. இது 54,000 ஈரடுக்குப் பேருந்துகளுக்கு நிகரானது எனத் தெரிவிக்கப்பட்டது.

