பிடோக் நார்த்தில் 2030ல் புதிய மருத்துவமனை சேவை

பிடோக் நார்த்தில் 2030ல் புதிய மருத்துவமனை சேவை

2 mins read

ரயில் நிலையம் அருகே ஒரே வளாகத்தில் பொது மருத்துவமனையோடு சமூக மருத்துவமனை

பிடோக் நார்த்­தில் புதிய ஒருங்­கிணைந்த மருத்­து­வ­மனை 2030ஆம் ஆண்டு வாக்­கில் திறக்­கப்­படும். இந்த மருத்­து­வ­மனை கிழக்­குப் பகுதி குடி­யி­ருப்­பா­ளர்­களுக்குச் சேவை­யாற்­றும்.

சுகா­தார அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று இதனைத் தெரி­வித்­தார். பிடோக் நார்த் எம்­ஆர்டி நிலை­யத்­திற்குப் பக்­கத்­தில் அந்த மருத்து­வ­மனை அமைந்­தி­ருக்­கும்,

பிடோக் ரிசர்­வா­யர் ரோடும் பிடோக் நார்த் ரோடும் புதிய மருத்து­வ­ம­னை­யைச் சூழ்ந்து இருக்­கும். புதிய மருத்­து­வ­மனை வளா­கத்­தில், பொது மருத்­து­வ­மனை மற்­றும் சமூக மருத்­து­வ­மனை சேவை­களைப் மக்­கள் பெற­லாம் என்று சுகா­தார அமைச்­சர் தெரி­வித்­தார். அவ­சர சேவை, உள்­நோயாளி மற்­றும் சிறப்பு வெளி­நோ­யா­ளிச் சேவை­களைப் பொது மருத்­து­வ­மனை வழங்­கும்.

புதிய வளா­கத்­தில் அமைந்­திருக்­கும் சமூக மருத்­து­வ­மனை, பொது மருத்­து­வ­ம­னை­யில் இருந்து விடு­விக்­கப்­படும் நோயா­ளி­க­ளுக்கு மறு­வாழ்­வை­யும் தேவைப்­படும் இதர பரா­ம­ரிப்­புச் சிகிச்­சை­க­ளை­யும் வழங்­கும்.

சிங்­கப்­பூ­ரில் பொது மருத்­து­வ­மனை­யும் சமூக மருத்­து­வ­ம­னை­யும் சேர்ந்து செயல்­படும் இதர பல சிகிச்சை நிலை­யங்­கள் உள்ளன.

பிடோக்­கில் அமை­யும் புதிய மருத்­து­வ­ம­னையை சிங்­ஹெல்த் நிறு­வ­னம் நிர்­வ­கித்து நடத்­தும் என்று ஊட்ரம் சமூக மருத்­து­வ­மனை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது அமைச்­சர் திரு கான் தெரி­வித்­தார்.

புதிய மருத்­து­வ­மனை சமூ­கத்­தின் தேவை­களைத் தலை­சி­றந்த முறை­யில் எப்­படி நிறை­வேற்­ற­லாம் என்­பது பற்றி புதுப்­புது யோச­னை­களைச் சேர்ந்து உரு­வாக்­கும் வகை­யில் சுகா­தார அமைச்­சும் சிங்­ஹெல்த் நிறு­வ­ன­மும் மக்­களை ஈடு­ப­டுத்­தும் என்­றும் அத்தகைய யோசனைகள் தயா­ரா­கும்­போது மேல் விவ­ரங்­கள் பகிர்ந்­து­கொள்­ளப்­படும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

மக்கள்தொகை பெருக்கம், மூப்படைதல் காரணமாக சுகாதாரப் பராமரிப்பிற்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார் அவர்.