ஏக்கத்தைப் போக்கும் நட்பும் சமூகமும்

ஏக்கத்தைப் போக்கும் நட்பும் சமூகமும்

2 mins read
8657a9f5-467c-4ba4-a969-38cb20430a93
குடும்பத்தைப் பிரிந்திருந்தாலும் சிங்கப்பூரில் இருப்பவர்களால் தீபாவளி மகிழ்ச்சியை உணர்வதாக இங்கு பணிபுரியும் மலேசியர்கள் கணேஷ்குமாரும் அவரது பெரியம்மா மகன் பாரதிதாசனும் கூறுகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் ஒன்­று­விட்ட சகோ­த­ரர்­கள் 25 வயது கணேஷ் குமார் அரு­ணா­ச­லன், 26 வயது பார­தி­தா­சன் மூர்த்தி இரு­வ­ரா­லும் தீபா­வளி கொண்­டாட தங்­கள் சொந்த ஊருக்­குச் செல்ல முடி­ய­வில்லை.

கிரு­மிப் பர­வ­லால் ஏற்­பட்­டுள்ள நட­மாட்­டக் கட்­டுப்­பா­டு­கள், வேலை இழப்புகள், வரு­மா­னக் குறைவு, பெற்­றோ­ரை­யும் நண்­பர்­க­ளை­யும் உற­வி­னர்­க­ளை­யும் பார்க்க முடி­யாத நிலை என்று பல கவ­லை­க­ளுக்­கி­டையே தீபா­வளியை மகிழ்ச்­சி­யு­டன் கொண்­டாட முடி­வ­தற்கு இங்­குள்­ளோ­ரின் அன்­பு­தான் கார­ணம் என்­ற­னர் இந்த சகோ­த­ரர்­கள்.

மலே­சி­யா­வில் மார்ச் மாதம் 18ஆம் தேதி நட­மாட்­டக் கட்­டுப்­பாடு அறி­மு­கம் செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து பல மாதங்­க­ளாக தங்­க­ளால் பய­ணம் செய்ய முடி­ய­வில்லை என்­றார் கடந்த ஓராண்­டாக இங்கு பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் திரு கணேஷ்.

"முன்­னர் மாதத்­திற்கு இரு­மு­றை­யா­வது என் குடும்­பத்­தைக் காணச் செல்­வேன்," என்று கூறி­னார் நெகரி செம்­பி­லா­னின் சிரம்­பான் மாவட்­டத்­தைச் சேர்ந்த திரு கணேஷ். அவ­ரது பெற்­றா­ரும் சகோ­த­ரி­யும் அங்­கு­தான் வசிக்­கின்­ற­னர்.

குடும்­பத்­தின் நிதி­நி­லை­மைக்­குப் பொறுப்­பேற்­றுள்ள திரு கணேஷ், கொவிட்-19 கிரு­மிப்­ப­ர­வ­லின் கார­ண­மாக, மலே­சி­யா­வி­லுள்ள மல்­லி­கைத் தோட்­டம் ஒன்­றில் பணி­பு­ரி­யும் தம் தந்தை வேலையை இழந்­து­விட்­ட­தா­கக் கூறி­னார். அவ­ரது தாயார் வேலை­யி­லி­ருந்து ஓய்­வு­பெற்று விட்­டார்.

குடும்­பத்­தைப் பரா­ம­ரிக்க தமது சேமிப்­புப் பணம் கரைந்து நிதி­நெ­ருக்­க­டியை எதிர்­நோக்­கிய திரு கணே­ஷுக்கு சிங்­கப்­பூ­ரி­லுள்ள நண்­பர்­க­ளின் அர­வ­ணைப்பு தைரி­யத்­தைக் கொடுத்­தது. தைரிய வார்த்­தை­க­ளால் ஊக்­கப்­ப­டுத்­தி­ய­து­டன், அவ­ருக்கு நிதி­யு­த­வி­யும் செய்­த­னர். "அவர்­கள் தந்த தைரி­ய­மும் ஆதரவும்­தான் என்னை இன்று நிம்­ம­தி­யாக வைத்­தி­ருக்­கிறது," என்­றார் அவர்.

இவ்­வாண்­டின் தொடக்­கத்­தில் தந்­தையை இழந்த பேருந்து ஓட்­டு­ந­ரான பார­தி­தா­ச­னுக்கு தீபா­வ­ளிக்கு ஜோகூர் பாரு­வில் வசிக்­கும் தமது குடும்­பத்­தி­னரைக் காணச் செல்லமுடி­யா­த வருத்­தம் இருந்தா­லும் பய­ணி­க­ளின் மகிழ்ச்­சி­யான முகங்­களில் தாம் உற்­சா­கம் அடை­வதாகக் கூறி­னார்.

அடுத்­தாண்டு தமது தந்­தை­யின் ஓர் ஆண்டு நினை­வு­நா­ளுக்­குள் ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கும் திரு பார­தி­தாசன், இங்கு தங்கு­வ­தால் செல­வும் அதி­க­ரித்­து­விட்­ட­தா­கக் கூறி­னார்.

"ஆயி­னும், இங்­குள்ள சிங்­கப்­பூர் நண்­பர்­கள் இந்­தக் கால­கட்­டத்­தில் எனக்கு பக்க­ ப­ல­மாக உள்­ள­னர்," என்றார் கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் பாரதிதாசன்.

பணச்­செ­ல­வைக் காட்­டி­லும் குடும்­பத்­தி­னரை விட்டுப் பிரிந்து தனி­மை­யால் பாதிக்­கப்­பட்­ட­தா­கக் கூறும் இவ­ருக்கு காத­லி­யும் நண்­பர்­களும் உற்­சா­க­மூட்­டி­ய­தா­கக் கூறி­னார்.

நண்­பர்­க­ளும் உடன் பணி­பு­ரி­ப­வர்­களும் மக்­களும் எங்­க­ளைப் போன்­ற­வர்­கள் மீது அக்­க­றை­யோ­டும் அன்­போ­டும் இருக்­கின்­ற­னர். முகம் தெரி­யாத பல­ரது அன்­பான வாழ்த்­து­களும், அக்­க­றை­யும் தங்­க­ளுக்கு உற்­சா­கம் ஊட்­டு­வ­தாக இரு­வ­ரும் தெரிவித்தனர்.