சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார் பிரகாசம் பக்கிரிசாமி

2 mins read
8c2f1a70-1c77-47eb-b43a-e846cd2b0a86
'பிரகாசம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரு வடிவழகன். படம்: gov.sg -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

இவ்­வாண்­டின் தீபா­வ­ளிக் கொண்­டாட்­டம் பிர­கா­ச­மா­ன­தாக இருக்­கட்­டும் என்று வாழ்த்­தும் வண்­ணம் சிங்­கப்­பூர் அர­சாங்­கம் சுவா­ர­சி­ய­மான காணொ­ளி­ ஒன்றைத் தயா­ரித்து வெளி­யிட்­டுள்­ளது.

காணொ­ளி­யில் 'பிர­கா­சம் பக்­கி­ரி­சாமி' என்ற கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்ள உள்­ளூர் பிர­ப­லம் திரு ச.வடி­வ­ழ­கன், அர­சாங்­கத் திட்­டங்­க­ளைப் பற்றி நகைச்­சுவை­யான பாணி­யில் விளக்­கியுள்ளார்.

அர­சாங்­கத்­தின் gov.sg 'யூடி­யூப்', ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்ள மூன்­றரை நிமி­டக் காணொளி­யைக் கிட்­டத்­தட்ட 99,000 பேர் பார்­வை­யிட்­டுள்­ள­னர். ஏறத்­தாழ 4,000 பேர் அந்­தக் காணொ­ளியை ஃபேஸ்புக் பக்­கம் மூலம் பகிர்ந்­தும் உள்­ள­னர்.

"அனை­வ­ரி­டத்­தி­லும் ஒளி இருக்­கிறது. அதை நாம்­ வெளிக்­கொண்டு­வ­ர­வேண்­டும். மற்­ற­வர்­க­ளுக்­கும் ஒளி­யாக இருக்க வேண்­டும் என்­பதை இக்­காணொளி மூலம் கூற வரு­கி­றோம்," என்று கூறி­னார் திரு வடி.

"ஆண்­டு­தோ­றும் மற்ற தீபா­வளி வாழ்த்து காணொ­ளி­களை நாம் காண்­கி­றோம். அவற்­றைப் போன்று தன்­னம்­பிக்­கை­யூட்­டும், மன­தைக் குளி­ர­வைக்­கும் காணொ­ளி­யா­கக் கொண்­டு­வ­ர­லாம் என்­றும் அதில் நகைச்­சு­வை­யைக் கலந்து மக்­க­ளைக் கவ­ர­வேண்­டும் என்­றும் விக்­னே­‌ஷ்­வ­ர­னி­டம் சொன்­னேன்," என்­றார்.

'கோஸ்­மிக் அல்­டிமா பிக்­சர்ஸ்' நிறு­வனத்தை நடத்தி வரும் விக்­னே­‌ஷ்­வ­ர­னும் வடி­வ­ழ­க­னும் 'பிளே­னட் கலாட்டா', அண்­மை­யில் வெளி­வந்த 'வடி, ரெடி, வெடி' போன்ற நிகழ்ச்­சி­களில் இணைந்து பணி­யாற்­றி­யுள்­ள­னர்.

"அவர் எழு­திய வச­னங்­களும் கதை­யும் அரு­மை­யாக இருந்­தன," என்று இக்­கா­ணொ­ளி­யில் நடிக்க முன்­வந்­த­தன் கார­ணத்­தைப் பகிர்ந்­தார் திரு வடி.

அர­சாங்­கத்­தின் திட்­டங்­களை மக்­களு­டன் பகிர்­வதை நோக்­க­மா­கக் கொண்டு, தீபா­வளி வாழ்த்தை அத­னு­டன் இணைத்து, வச­னம் எழுதி, காணொளி­யைப் படைத்­துள்­ளார் திரு எஸ் எஸ் விக்­னே­‌ஷ்­வ­ரன். மின்­னி­லக்­க­மா­தலை வர்த்­த­கங்­க­ளுக்கு ஊக்­கு­விப்­பது முக்­கிய அம்­ச­மாக உள்­ளது.

என்­ன­தான் சவால்­களை எதிர்­நோக்­கி­னா­லும் அவற்­றில் நல்ல தீர்­வு­க­ளைக் காண­லாம் என்­றும் பலன் தரும் திட்­டங்­க­ளைச் சாத­க­மாக்­கிக்­கொண்டு நம்­பிக்­கை­யு­டன் அவற்றை எதிர்­கொள்­ள­லாம் என்­றும் பார்ப்­ப­வர்­கள் அறி­ய­லாம்.

கொவிட்-19 காலம் நம்மை இரு­ளில் மூழ்­க­வைத்­தா­லும் பிர­கா­ச­மான எதிர்­கா­லத்தை நம்­பிக்­கை­யு­டன் எதிர்­பார்ப்­போம் என்ற செய்­தியை வெளிக்­கொ­ண­ரும் காணொளி மக்­கள் மத்­தி­யில் பெரும் வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

"வீட­மைப்­புப் பேட்­டை­யை­யும் வெளிச்­சத்­தை­யும் மைய­மா­கக் கொண்டு இக்­கா­ணொ­ளி­யைத் தயா­ரித்­தோம். அத­னால்­தான் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கக் கடை­வீட்­டில், விளக்­கு விற்கும் கடை நடத்­தும் தமிழ் பேசும் ஒரு­வ­ரைக் கதா­பாத்­தி­ர­மா­கக் கொண்டு இதை எழு­தி­னேன்," என்­றார் திரு விக்­னே­‌ஷ்­வ­ரன்.

"இந்த ஆண்டு தீபா­வ­ளியை முன்­னிட்டு எந்­தத் திரைப்­ப­ட­மும் திரை­யரங்கு­களில் வராத கார­ணத்­தால் குறும்­ப­டம் போலவே இந்­தக் காணொ­ளி­யைத் தயாரிப்­ப­தும் எங்­கள் திட்­ட­மாக இருந்­தது," என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

தமி­ழில் உள்ள இந்­தக் காணொ­ளியை மற்ற இனத்­த­வ­ரும் கண்டு ரசிக்க, ஆங்­கி­லத் துணை உரை­யும் இதில் இடம்­பெற்­றுள்­ளது.