வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வழிபாட்டுத்தலங்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் வழிபாட்டுத்தலங்கள்

2 mins read
c5f7c33f-aa7b-4400-9ada-9b60968251aa
வெளிநாட்டு ஊழியர்களுக் கான அன்பளிப்பு பைகளில்சுமார் 2,000 லட்டுகளை அடைக்கும் பணியில் ஈடுபட்ட ஸ்ரீ செண்பக விநாயகர் கோயில் தொண்டூழியர் கள். படம்: திமத்தி டேவிட் -

தீபா­வ­ளியை முன்­னிட்டு மனி­த­வள அமைச்சு பல்­வேறு சமூக அமைப்­பு­க­ளு­டன் இணைந்து வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இனிப்பு, கார பல­கா­ரங்­களை விநி­யோ­கிக்­கும் நட­வ­டிக்­கைக்கு ஏற்­பாடு செய்­தது.

அந்த முயற்­சிக்கு கைகொ­டுத்த ஓர் அமைப்பு சிலோன் சாலை­யில் அமைந்­துள்ள ஸ்ரீ செண்­பக விநா­ய­கர் கோயில். கடந்த வார­இ­றுதி நாட்­க­ளான நவம்­பர் 7, 8 ஆகிய தேதி­களில் பிற்­ப­கல் நேரத்­தில் கோயில் மூடப்­பட்ட வேளை­யில் பாது­காப்பு விதி­மு­றை­க­ளுக்கு இணங்க கிட்­டத்­தட்ட 60 தொண்­டூ­ழி­யர்­கள் 2,000 பல­கார பொட்­ட­லங்­க­ளைத் தயா­ரிக்க உத­வி­னர்.

தீபா­வளி விழாக்­கா­லத்­தில் கோயில்­

க­ளுக்கு சென்று வழிபட முடி­யாத நிலை­யில் உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு இந்த முயற்சி இன்­ப­ம­ளிக்­கும் என்று நம்­பிக்­கை­ய­ளித்­தார் ஸ்ரீ செண்­பக விநா­ய­கர் கோயிலை நிர்­வ­கிக்­கும் சிங்­கப்­பூர் இலங்கைத் தமி­ழர் சங்­கத்­தின் தலை­வர் திரு எஸ்.மோக­ன­ரூ­பன்.

"தீபா­வளி என்­பது கொண்­டாட்­டத்­திற்­கான பண்­டிகை. கொவிட்-19 சூழ­லால் இந்த பண்­டி­கை­யைக் கொண்­டாட முடி­ய­வில்லை என்ற ஏக்­கம் பல ஊழி­யர்­க­ளுக்கு இருக்­கும். அவர்­களை மகிழ்­வூட்­டு­வ­தற்­கான நல்ல முயற்சி இது," என்­றார் திரு மோக­ன­ரூ­பன்.

அதே­போல சிராங்­கூன் சாலை­யில் அமைந்­துள்ள ஸ்ரீ வீ­ர­மா­காளி அம்­மன் கோயி­லும் தீபா­வளி அன்­ப­ளிப்­புப் பை களை வழங்க ஏற்­பாடு செய்­தது. ஒவ்­வோர் ஆண்­டும் தீபா­வ­ளித் திரு­நா­ளில் சுமார் 12,000 வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு கோயில் சார்­பில் அன்­ன­தா­னம் வழங்­கப்­ப­டு­வ­தாக அதன் நிர்­வா­கம் கூறி­யது.

ஆனால் இவ்­வாண்டு கொவிட்-19 சூழல் கார­ண­மாக தீபா­வளிக் கொண்­டாட்­டத்தை கோயில் அமைந்­துள்ள தொகு­திக்­குள்­ளேயே பாது­காப்­பு­டன் வழி­ந­டத்த ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. புளோக் 47 ஓவன் ரோட்­டில் உள்ள குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­பட்­டன.

தீபா­வ­ளிக்­காக 190 அன்­ப­ளிப்­புப் பைகள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன. அரிசி, பிஸ்­கெட், பானம், கொவிட்-19 முகக்­க­வ­சம், தீபா­வ­ளிப் பல­கா­ரங்­கள் ஆகி­யன அந்­தப் பைகளில் நிரப்­பப்­பட்­டன.

மோல்­மின் கேர்ன்­ஹில் குடி­மக்­கள் ஆலோ­ச­னைக் குழு­வும் ஓவன் ரோடு வசிப்போர் குழு­வும் இந்த முயற்­சிக்­குக் கைகொ­டுத்­தன.

அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்­கும் பணி­யில் 16 தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­ட­தாக ஸ்ரீ வீ­ர­மா­காளி அம்­மன் கோயில் நிர்­வா­கம் தெரி­வித்­தது. குடியிருப்பாளர் களை தொண்டூழியர்களோடு கலாசார, சமூக, இளையர் துறை துணை அமைச்சர் எல்வின் டானும் சென்று சந்தித்தார்.