சவால்மிக்க நேரத்திலும் சளைக்காத சமூக உணர்வு

த்ற்­போ­தைய கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழ­லில் பல­ரும் வேலை இழந்­துள்­ள­னர், வேறு சிலரோ வீட்டில் முடங்­கிக்கிடக்­கும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

நிதிச் சுமையை எதிர்­கொள்­ளும் பல இந்­திய குடும்­பங்­க­ளைத் தீபா­வளி பண்­டி­கை­யின்­போது மகிழ்­விக்­கும் நோக்­கத்­தில் தொண்­டூ­ழி­யக் குழு ஒன்று கள­மி­றங்­கி­யது.

‘இத­யங்­க­ளுக்கு ஒளி­யூட்­டு­தல், இல்­லங்­க­ளுக்கு ஒளி­யூட்­டு­தல்’ என்ற திட்­டத்­தின்­கீழ் செயல்­படும் தொண்­டூ­ழி­யர்­கள் கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக வசதி குறைந்த இந்­தியக் குடும்­பங்­க­ளுக்கு தீபா­வளி உணர்­வைப் பரப்பி வரு­கின்­ற­னர்.

தீபா­வ­ளியை முன்­னிட்டு ஒவ்­வோர் ஆண்­டும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளின் இல்­லங்­க­ளுக்­குச் சென்று பண்­டி­கைக்கு தேவை­யான மளி­கைப் பொருட்­க­ளை­யும் வீட்­டில் செய்த பல­கா­ரங்­க­ளை­யும் தொண்­டூ­ழி­யர்­கள் வழங்­கு­வது வழக்­கம்.

ஒரே இடத்­தில் நூற்­றுக்­க­ணக்­கான தொண்­டூ­ழி­யர்­கள் ஒன்­று­கூடி, அன்­ப­ளிப்­புப் பைக­ளைத் தயார் செய்து, வாக­னங்­களில் ஏற்றி, தீவின் பல பகு­தி­களில் வசிக்­கும் குடும்­பங்­க­ளுக்கு விநி­யோ­கம் செய்­யும் நடை­முறை தற்­போ­தைய கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளால் இடம்­பெ­ற­வில்லை.

அதற்­குப் பதி­லாக, முன்­கூட்­டியே அன்­ப­ளிப்­புப் பைக­ளை தயாரித்து, தீவின் 20 இடங்­களி­லி­ருந்து அவற்றைப் பெற்­றுக்­கொள்ள ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

இம்­மா­தம் முதல் வாரம் முழு­வதும் தொண்­டூ­ழி­யர்­க­ளின் முயற்­சி­யால் இந்த அன்­ப­ளிப்­புப் பைகள் குடும்­பங்­க­ளி­டம் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

“இத்­திட்­டத்­தின் ஏற்­பா­ட்டுக் குழு­வி­னர், ஒரு­வரை ஒரு­வர் நேரில் சந்­திக்­கா­மல் ‘ஸூம்’ மெய்­நி­கர் சந்­திப்பு, ‘வாட்ஸ்­அப்’ செயலி, தொலை­பேசி உரை­யா­டல் ஆகிய வற்றின் வழி சந்­திப்­பு­களை மேற்­கொண்டு கடந்த நான்கு மாதங்­களாக தொண்­டூ­ழி­யப் பணிக்­குத் திட்­ட­மிட்டு வந்­தோம்.

“எங்­க­ளது முயற்­சிக்­குத் தொண்­டூ­ழி­யர்­கள் தேவை என்று சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்ட ஒரு சில மணி நேரத்­தில் பல­ரும் உதவ முன்­வந்­த­னர்,” என்று தெரி­வித்­தார் இத்­திட்­டத்­தில் 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து இணைந்­துள்ள அர­சாங்க ஊழி­ய­ரான குமாரி மலர், 41.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன், இத்­திட்­டத்­தில் அன்­ப­ளிப்­புப் பைகளில் பொருட்­களை நிரப்­பும் நட­வ­டிக்­கை­யைத் தொடங்­கிய 30 வயது திரு கணே­சன் சோமா, இப்­போது ஏற்­பாட்­டுக் குழு­வில் இடம்­பெற்­றுள்­ளார்.

“கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தால் பொரு­ளி­யல் ரீதி­யிலும் மன­த­ள­வி­லும் சமூ­கத்­தில் பல­ரும் பாதிக்கப்பட்டுள்­ள­னர். இத்­ த­ரு­ணத்தில் அவர்­க­ளுக்­குக் கூடு­தல் உதவி தேவை என்­பதை உணர்­கி­றோம்,” என்­றார் திட்ட மேலா­ள­ராகப் பணி­யாற்­றும் கணே­சன்.

குடும்­பங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அன்­ப­ளிப்­புப் பைகளில் $120 ரொக்­கம், என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ் பற்­றுச்­சீட்­டு­கள், வண்ண தீபா­வளி மெழுகு விளக்­கு­கள், பல­கா­ரங்­கள் ஆகி­யவை அடங்­கி­யுள்­ளன.

கடந்த ஆண்டு இத்­திட்­டத்­திற்கு ‘கிரான்பெர்­ரி பிஸ்­கெட்டு’களைத் தயா­ரிக்க உத­விய திரு­மதி பெரி­ய­நா­யகி தேவன், இவ்­வாண்டு 10 போத்­தல்­களில் ‘சூஜி’ பல­கா­ரங்­களை வீட்­டில் தயா­ரித்­தார்.

“மற்ற இனத்­த­வர்­களும் பல­கா­ரங்­க­ளைத் தயா­ரிக்­கும் முயற்­சி­யில் ஈடு­ப­டு­கின்­ற­னர். பொருட்­களை எங்கு வாங்­கு­வது, பல­கா­ரத்தை எப்­படிச் செய்­வது போன்ற தக­வல் பரி­மாற்­றம் எங்­க­ளுக்­குள் நடக்­கும்.

“பொருள் கொடுத்­து­தான் பங்­க­ளிக்க முடி­யும் என்­றில்­லா­மல் எங்­க­ளால் முடிந்த சிறிய அள­வில் பண்­டி­கை­யின்­போது பிற­ரு­டன் மகிழ்ச்­சி­யைப் பகிர முடி­கிறது,” என்­றார் தமது குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரை­யும் இம்­மு­யற்­சி­யில் ஒருங்­கி­ணைந்த இல்­லத்­த­ர­சி­யான திரு­மதி பெரி­ய­நா­யகி, 59.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பல ஆண்டு­கள் குடி­யி­ருந்­து­விட்டு தாய­கம் திரும்­பிய பின்­னர் இம்­முறை குடும்­பத்­தி­ன­ரு­டன் சேர்ந்து தீபாவ­ளி­யைக் கொண்­டா­டிய குமாரி ‌ஷிவாணி பிரம்­ம­தே­வன், தெம்­ப­னி­சில் வசிக்­கும் எட்­டுக் குடும்­பங்­க­ளி­டம் அன்­ப­ளிப்­புப் பைகளை வழங்க உத­வி­னார்.

“ஒரு வீட்­டில் குடும்­பத் தலை­வர் எட்டு மாதங்­க­ளாக வேலை­யின்றி இருப்­பதை நான் அறிந்­தேன். அன்­ப­ளிப்­புப் பை தமது குடும்­பத்­திற்கு உத­வி­யாக இருக்­கும் என்று அவர் சொன்­னார்.

“அர்­த்த­முள்ள ஒரு காரி­யத்­தில் ஈடு­பட்­ட­தில் எனக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டது,” என்­றார் கணக்­கா­ள­ரான ‌ஷிவாணி, 26.

அன்­ப­ளிப்­புப் பைகளில் பொருட்­களை நிரப்­பு­வது, பல­கா­ரங்­க­ளைத் தயா­ரிப்­பது, சொந்த வாக­னத்­தில் பைக­ளை ஏற்றி அவற்றைக் குடும்­பங்­க­ளி­டம் விநி­யோ­கிப்­பது என கிட்­டத்­தட்ட 350 தொண்­டூ­ழி­யர்­களின் பங்களிப்பு இத்­திட்­டத்­தில் அடங்­கி­யுள்­ளது.

ஏறத்­தாழ 1,500 குடும்­பங்­களில் மகிழ்ச்சி ஒளி­வெள்­ளம் பெருக இவர்­க­ளது பங்கு அளப்­ப­ரி­யது. இந்த முயற்­சிக்கு மொத்­தம் $204,000 மதிப்­பி­லான நன்­கொடை திரட்­டப்­பட்­டது.

ஆண்­டுக்கு ஆண்டு வளர்ந்­து ­வ­ரும் இந்த முயற்­சிக்கு சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­க­மும் (சிண்டா) ஸ்ரீ நாரா­யண மி‌‌ஷன் போன்ற பல அமைப்­பு­களும் ஆத­ரவு தந்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!