கவலையை நீக்கி விழாக்கால உணர்வைப் பரப்பிய நற்பணி

பண்­டிகை காலத்­தில் அறப்­பணி செய்து மற்­ற­வர்­க­ளி­டம் புன்­ன­கை­யைப் பகிர்­கிறது ‘விஷ் ஏ ஸ்மைல்’ அற­நி­று­வ­னம். ஐந்து நாட்­களில் $60,000க்கும் அதிக மதிப்­பு­டைய தீபா­வ­ளிப் பரி­சு­க­ளை­யும் ரொக்க அன்பளிப்புகளையும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளி­டம் வழங்கி அவர்­க­ளது இல்­லங்­களில் விழாக்­கால உணர்வை இந்த அற­நி­று­வ­னம் பரப்­பி­யது.

2015ஆம் ஆண்டு திரு ர.பால­கி­ருஷ்­ணன் தலை­மை­யில் தொடங்­கப்­பட்ட இந்த அற­நி­று­வ­னத்­தில் சிங்­கப்­பூர், இந்­தியா, இலங்கை, மலே­சியா, ஆஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் வசிக்­கும் ஏறத்­தாழ 140 உறுப்­பி­னர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர். உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு உத­விக்­க­ரம் நீட்டி சமூ­கத் தொண்டை இந்த அற­நி­று­வ­னம் புரிந்து வரு­கிறது.

‘விஷ் ஏ ஸ்மைல்’ அற­நி­று­வ­னம், சமூ­கத்­திற்­குத் தங்­க­ளால் முடிந்த உத­வி­யைப் புரிய விரும்­பும் தனி­ந­பர்­க­ளைக் கொண்டு உள்­ளது.

மொழி, சம­யம், இனம் ஆகி­ய­வற்­றைத் தாண்டி உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்கு தக்க சம­யத்­தில் உதவி வழங்­கு­வதை இந்த அற­நி­று­வ­னம் நோக்­க­மாக கொண்டு உள்­ளது.

“சென்­னை­யில் வெள்ள நிவா­ர­ணப் பணி­கள், சிங்­கப்­பூ­ரில் மருத்­துவ சிகிச்­சைக்கு நிதி தேவைப்­படும் குடும்­பங்­கள், சட்ட ரீதி­யில் ஆலோ­சனை தேவைப்­படும் குடும்­பங்­கள், மன­ந­லப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்­டோர் போன்ற பல­ருக்­கும் நாங்­கள் கைகொ­டுக்க முயற்சி எடுத்து வரு­கி­றோம்,” என்று ‘விஷ் ஏ ஸ்மைல்’ அறநிறு­வ­னத்­தின் பொதுச் செய­லா­ளர் ஜே.கே.சர­வணா தெரி­வித்­தார்.

‘ஸ்மைல் தீபா­வளி’ என்று அழைக்­கப்­படும் இந்த தீபா­வளி அன்­ப­ளிப்­புப் பைகளை விநி­யோ­கிக்­கும் பணி மூன்று ஆண்­டு­களுக்கு முன்பு தொடங்­கி­யது.

2018ஆம் ஆண்டு தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு 50 குடும்­பங்­க­ளுக்கு உதவி புரிந்த இந்த அற­நி­று­வ­னம், இந்த ஆண்டு மொத்­தம் 204 குடும்­பங்­க­ளி­டம் தீபா­வ­ளிக்­குத் தேவை­யான பொருட்­கள் அடங்­கிய அன்­ப­ளிப்­புப் பைக­ளை­யும் $150 ரொக்­கத்­தை­யும் வழங்­கி­யது.

ஒவ்­வோர் அன்­ப­ளிப்­புப் பையி­லும் பூஜைக்­குத் தேவை­யான பொருட்­கள், சமை­யல் பொருட்­கள், மத்தாப்பு, முறுக்கு என 35க்கும் மேற்­பட்ட பொருட்­கள் உள்­ளன.

‘ஸ்மைல் தீபா­வளி’ அன்­ப­ளிப்­புப் பைக­ளைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வசதி குறைந்த குடும்­பங்­களை அடை­யா­ளம் காண, சிண்­டா­வின் குடும்ப சேவை மையம், அங் மோ கியோ-செங் சான் குடும்ப சேவை மையம் மற்­றும் ரோட்­டரி குடும்ப சேவை மையம் ஆகிய அமைப்­பு­கள் உதவி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!