காற்பந்துக் குழுவின் சமூகத் தொண்டு

காற்பந்துக் குழுவின் சமூகத் தொண்டு

2 mins read
884f17a8-1673-488f-a290-d834dbadd988
'லேப்பாக் ஃபூட்டி' காற்பந்துக் குழு உறுப்பினர்களிடம் இருந்து அன்பளிப்புப் பையை திருவாட்டி ரத்தினம் அம்மாள் பெற்றுக்கொள்கிறார். படம்: திமத்தி டேவிட் -

நெருங்­கிய நண்­பர்­கள் சிலர், காற்­பந்து விளை­யாட்டு மூலம் தொடர்­பு­களை நிலை­நாட்­ட­லாம் என்று எண்ணி 'லேப்­பாக் ஃபூட்டி' எனும் பொழு­து­போக்கு காற்­பந்­துக் குழு ஒன்றை ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன் அமைத்­த­னர்.

பல்­வேறு பின்­ன­ணி­யைச் சேர்ந்த 30 உறுப்­பி­னர்­கள் கொண்ட இக்­கு­ழு­வி­னர், ஒவ்­வொரு வார­மும் தவ­றா­மல் காற்­பந்து ஆட்­டத்­திற்­காக ஒன்­று­கூ­டு­வர். ஆனால், கொவிட்-19 கிரு­மித்­தொற்று கட்­டுப்­பா­டு­களால் ஆறு மாதங்­க­ளுக்­கும் மேலாக இவர்­கள் திடல் பக்­கம் போக­வில்லை.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று பல குடும்­பங்­க­ளின் வரு­மா­னத்­தைப் பாதித்­துள்­ளது. அதைக் கருத்­தில் கொண்டு, இம்­மா­தம் 8ஆம் தேதி காற்­பந்­துக் காலணி­ க­ளு­டன் 'ஃபுட்சால்' திட­லுக்கு செல்­வ­தற்­குப் பதி­லாக, கைகளில் மளி­கைப் பொருட்­களு­டன் தீவின் பல பகு­தி­களில் வசிக்­கும் இந்­திய குடும்­பங்­களுக்கு ஆத­ரவு நல்க இக்­குழு­வி­னர் கள­மி­றங்­கி­னர்.

நன்­கொ­டை­யும் கொடுத்து ஆத­ர­வா­ளர்­க­ளை­யும் திரட்­டிய இவர்­கள், பொன்னி அரிசி, மசாலா, காப்­பித் தூள், முறுக்கு, குக்­கீஸ், சவர்க்­கா­ரம், ‌‌‌ஷாம்பூ, குளி­யல் துண்டு, பேரங்­காடி பற்­றுச்­சீட்­டு­கள், முகக்­க­வ­சங்­கள், கிருமி நாசினி என 20க்கும் மேற்­பட்ட அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளைச் சேக­ரித்­த­னர்.

ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் ஏறத்­தாழ $200 மதிப்­புள்ள அன்­பளிப்­புப் பைகளை இவர்­கள் தயார் செய்­த­னர்.

புக்­கிட் பாத்­தோக், புக்­கிட் பஞ்­சாங், மார்­சி­லிங், அல்­ஜு­னிட் போன்ற வீட­மைப்­புப் பேட்­டை­களில் வசிக்­கும் 30 குடும்­பங்­களி­டம் அன்­ப­ளிப்­புப் பைகளை 'லேப்­பாக் ஃபூட்டி' குழு­வி­னர் கொண்டு சேர்த்­த­னர்.

இது­போன்ற தொண்­டூ­ழி­யப் பணி­களில் இக்­கு­ழு­வி­னர் ஈடு­படு­வது இது புதி­தல்ல.

மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பு தமிழ் முரசு நடத்­திய சிறு­வர்­க­ளுக்­கான 'ஃபுட்சால்' காற்­பந்­துப் போட்­டிப் பரி­சு­க­ளுக்கு இவர்­கள் நன்­கொடை அளிக்க முன்­வந்­தது நினை­வு­கூ­ரத்­தக்­கது.

அது­மட்­டு­மல்­லா­மல், சில ஆண்டு­க­ளுக்கு முன்பு மலே­சி­யா­வின் கிள்­ளான் பகு­தி­யில் ஆத­ர­வற்­றோர் இல்­லங்­களில் வசித்த பிள்­ளை­களுக்கு விளை­யாட்­டு சாத­னங்­கள், ரொக்க நன்­கொடை, உணவு ஆகி­ய­வற்றை 'லேப்­பாக் ஃபூட்டி' குழு­வி­னர் நேரில் சென்று வழங்­கி­னர்.

"சிலர் பெரிய வீவக வீடு­களில் வசித்­தா­லும், குடும்ப உறுப்­பி­னர்­கள் வேலையை இழந்­த­தில் நிதி நிர்­வா­கத்­தில் பல சிர­மங்­கள் எதிர்­நோக்­கு­வ­தாக எங்­க­ளி­டம் கூறி­னர்.

"இது­போன்ற குடும்­பங்­க­ளுக்கு நாங்­கள் புரிந்த உதவி அவர்­களுக்கு உறுதுணையாக இருந்­ததை எண்ணி மகிழ்­கி­றோம்," என்று தெரி­வித்­தார் 'லேப்­பாக் ஃபூட்டி' குழு­வின் மூத்த உறுப்­பி­ன­ரான திரு சதீ‌ஷ் நாயுடு, 53.

"லேப்­பாக் ஃபூட்டி குழு­வில் இடம்­பெற்­றுள்ள பல­ரும் நல்ல வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். காற்­பந்து விளை­யா­டு­வ­தோடு நிறுத்­தி­விடாமல் சமூ­கத்­திற்­குப் பங்­க­ளிக்க நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம்.

"உள்­ளூ­ரில் தொண்­டூ­ழிய ஆதரவு தேவைப்­படும் அமைப்­பு­களு­டன் சேர்ந்து செயல்­பட்டு சமூ­கத்­தின் வெவ்­வேறு பிரி­வி­ன­ருக்­குப் பங்­க­ளிப்­பது எங்­க­ளது குழு­வின் அடுத்த இலக்­கா­கும்," என்­றார் சொந்த தொழி­லில் செய்­யும் திரு ராஜ்­பீர் சிங் சொப்ரா, 36.

ஆண்டு இறு­திக்­குள் காற்­பந்து விளை­யாட இவர்­கள் மீண்­டும் கூடு­வார்­களா என்­பது இன்­னும் தெரி­ய­வில்லை.

எனினும், கிறிஸ்­மஸ் பண்­டி­கைக்­காலத்தில் 'லேப்­பாக் ஃபூட்டி' காற்­பந்­துக் குழு வேறொரு சமூ­கப் பணி­யில் ஈடு­பட ஆயத்­த­மாகி வரு­கிறது.