நீதித்துறை வசம் ஹைஃபிளக்ஸ்

2 mins read
f17ac463-8e7f-40e2-bff9-52099087d37d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் நிர்வாகம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு நிறு­வ­ன­மான 'ஹைஃபிளக்ஸ்' நீதித்­துறை நிர்­வா­கத்­தின் கீழ் வந்­துள்­ளது.

இதற்­கான உத்­த­ரவை நேற்று உயர்­நீ­தி­மன்­றம் பிறப்­பித்­தது.

இரண்­டு ஆண்டுகளுக்­கும் அதிக கால­மாக நீடித்து வரும் கடன் அடைப்பு முயற்­சி­க­ளைத் தொடர்ந்து உட­ன­டி­யாக இந்த ஏற்­பாடு நடப்­புக்கு வரு­கிறது.

இத­னை­ய­டுத்து, அந்த நிறு­வ­னத்தை நிறு­விய ஒலி­வியா லும், நிர்­வா­கச் சபை உறுப்­பி­னர்­கள் எல்­லா­ரும் இனி­மேல் நிறு­வ­னத்­தைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

நீதித்­துறை நிர்­வா­கி­யாக போரோலி வால்ஷ் நிறு­வ­னம் ஹைஃபிளக்­ஸின் செயல்­பா­டு­களைத் தன் பொறுப்­பில் எடுத்­துக்­கொண்­டுள்­ளது.

போரோலி வால்ஷ் நிறு­வ­னத்­தின் பிர­மு­கர்­கள் ஹைஃபிளக்ஸ் கட்­ட­டத்­திற்­குச் சென்று அதன் பூட்­டு­களை மாற்றி கணினி இயந்­தி­ரங்­க­ளைச் சரி­பார்த்து எல்­லா­வற்­றை­யும் தங்­கள் கட்­டுப்­பாட்­டில் எடுத்­துக்­கொள்­ளத் தொடங்­கி­விட்­ட­தாக தக­வல் வட்­டா­ரங்­களை மேற்­கோள்­காட்டி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டுள்­ளது.

ஹைஃபிளக்ஸ் நிறு­வ­னத்தை வாங்கி தனி­யார்­ம­ய­மாக்கி அதில் $208 மில்­லி­யன் பணம் போடு­வதற்­கான திட்­டத்தை அமெ­ரிக்க நிதி நிர்­வாக நிறு­வ­ன­மான 'ஸ்ட்ரடிஜிக் குரோத் இன்­வெஸ்ட்­மெண்ட்ஸ்' முன்­னு­ரைத்து இருக்­கிறது.

இதைக் கருத்­தில் கொண்டு மேலும் கொஞ்ச காலம் அவ­கா­சம் வழங்­க­லாம் என்று ஹைஃபிளக்ஸ் வழக்­க­றி­ஞர்­களும் கடன்­கொ­டுத்­த­வர்­களில் சில­ரும் கூறி வரு­கி­றார்­கள். என்­றா­லும் உயர்­நீ­தி­மன்­றம் நிர்­வா­கப் பொறுப்பை நீதித்­துறை எடுக்­கும்­படி உத்­த­ர­விட்டு உள்­ளது.

கடன்­களை அடைப்­ப­தற்­கான தற்­கா­லிக நிறுத்­தி­வைப்­புக் காலம் கடந்த இரண்­டரை ஆண்­டு­களில் 12 தடவை நீட்­டிக்­கப்­பட்டு இருக்­கிறது என்­றா­லும் ஹைஃபிளக்ஸ் நிர்­வா­கச் சபை இதன்­தொ­டர்­பில் எந்­த­வொரு உடன்­பாட்­டை­யும் காண­வில்லை.

இந்த நிறு­வ­னத்­தின் எஞ்­சிய மதிப்­பும் ஏற்­கெ­னவே குறைந்­து­விட்­டது என்று கடன்கொடுத்த வர்களில் சிலர் அஞ்சுகிறார்­கள்.

இவை எல்லாம் ஒருபு­றம் இருக்க, ஹைஃபிளக்ஸ் நிறு­வ­ன­மும் அத­னு­டைய இப்­போ­தைய மற்­றும் முன்­னாள் இயக்­கு­நர்­களும் இப்­போது விசா­ர­ணை­யின்கீழ் இருக்­கி­றார்­கள்.

பொய்­யான, தவ­றான வழி­காட்­டும் கணக்கு அறிக்­கை­கள், வெளி­யீட்டு விதி­மு­றை­களை மீறி­யது ஆகி­யவை தொடர்­பில் அவர்­கள் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.