பிரதமர் லீ: சிங்கப்பூருக்கு உயர் தொழில்நுட்பத் திறன் தேவை

சிங்கப்பூரில் உயர் தொழில்நுட்பத் திறனாளர்கள் உருவாவது ஒருபுறம் இருந்தாலும், தொழிற்துறை வளர்ச்சி பெறவும் அவசரகால அடிப்படையில் பிரச்சினைகளைத் தீர்க்கவும் உலகத் தரம் வாய்ந்த நிபுணத்துவ குழுக்களை உருவாக்குவது இன்றியமையாதது.

அதற்கு உயர்நிலை, மத்திம நிலையில் உயர் திறனாளர்களை வெளிநாடுகளிலிருந்து தருவிக்க வேண்டியுள்ளது என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.

தொழிற்துறையில் வெளிநாட்டினர் அதிக அளவில் சிங்கப்பூருக்கு வருவதும் அவர்களால் ஏற்படக்கூடிய போட்டித்தன்மையால் சிங்கப்பூரர்களிடையே அதிருப்தி ஏற்படுவதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது திரு லீ கூறினார்.

இதில் சிங்கப்பூரர்கள் தாங்கள் நியாயமாக நடத்தப்படுகின்றனர் என்ற நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு வருபவர்கள் தகுந்த திறனாளர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

அத்துடன், அவர்களிடமிருந்து சிங்கப்பூரர்கள் கற்றுப் பயன்பெறக்கூடிய அளவிற்கு அவர்கள் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
செவ்வாய்க்கிழமை இரவு சிங்கப்பூர் நேரலை தொழில்நுட்பக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

சிங்கப்பூரில் அடித்தள கட்டமைப்புக்கு ஏற்ற தொழில்நுட்ப சூழல் நிலவினாலும், இதில் முக்கியமாக தேவைப்படுவது திறனா ளர்கள் என்று அவர் விளக்கினார்.
“தொழிற்துறையை வளர்க்கவும் பிரச்சினைகளை அவசர கதியில் தீர்க்கவும் தொழில்நுட்பத் திறனாளர்கள் தேவை,” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய பிரதமர், கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள சிங்கப்பூருக்கு தொழில்நுட்பம் கைகொடுத்துள்ளது என்றும் பரந்த அளவிலும் அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கும் தொழில்நுட்பம் உதவியுள்ளதாகத் தெரிவித்தார்.

மனித உயிரணுக்கள், நோயின் தன்மை போன்றவற்றின் ஆராய்ச்சிக்கும் நோய் சோதனை, சிகிச்சை முறைகளுக்கும் உயிர் மருத்துவ அறிவியல் மிக முக்கியம் என்பதை பிரதமர் லீ நினைவூட்டினார்.

போல், நோய்களின் தொடர் கண்காணிப்புக்கு, தகவல் பகுப் பாய்வு, வீட்டிலிருக்கும்படி பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, தொடர்புத் தடங்களை கண்டறிவது போன்றவற்றுக்கு தகவல் தொழில்நுட்பம் மிகவும் முக்கியம் என்று கூறினார் பிரதமர் லீ.
இதன் தொடர்பில், 2003ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் சுவாசப் பிரச்சினையின்போது தொடர்புத் தடங்களை கண்டறிவதில் அதிகப்படியான ஊழியர்களின் துணையுடன் கைகளால் குறிப்பு எடுப்பதன் மூலம் நடந்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப் பட்டவர்கள் பன்மடங்கு அதிகம் என்றும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அவசர கதியில் தனிமைப்படுத்த வேண்டி யவர்களாக இருந்தனர் என்றும் திரு லீ தெளிவுபடுத்தினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!