$32 மில்லியன் கடன்பட்டிருக்கும் ராபின்சன்ஸ்

$32 மில்லியன் கடன்பட்டிருக்கும் ராபின்சன்ஸ்

1 mins read
df105d47-b9db-408b-b4ad-bccc8a8331c0
-

ராபின்­சன்ஸ் சில்­லறை விற்­ப­னைக் குழு­மம், தனது கடைசி இரண்டு கடை­க­ளை­யும் மூடவுள்ள நிலையில் 440க்கும் மேற்பட்ட பேருக்குக் குறைந்தது $31.7 மில்லியன் கடன்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ராபின்சன்ஸ் மூடுவதன் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்துக்கொள்வதற்காக 'கோர்டமெந்தா' நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமையன்று கடன் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் கடிதம் அனுப்பியிருந்த அந்நிறுவனம், இம்மாதம் 26ஆம் தேதி, பிற்பகல் 2 மணிக்கு இணையம்வழி கடன் கொடுத்தவர்களுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது.

ராபின்சன்சின் அனைத்து விவகாரங்கள் குறித்தும் கடன் கொடுத்தவர்களுக்கு ஓர் அறிக்கை வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

கடன் கொடுத்தோரில் 'சிம்மன்ஸ்', 'சீலி', 'தெம்புர்' போன்ற மெத்தை நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், ஆர்ச்சர்ட்

ரோடு வர்த்தகச் சங்கம், சிங்டெல் நிறுவனம் போன்றவற்றின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மாறிவரும் பயனாளர்களின் தேவைகள், வாடகை போன்ற செலவுகளைச் சமாளிப்பதில் ஏற்பட்ட நெருக்குதல் காரணமாக ராபின்சன்ஸ் அதன் 'ஹீரன்' மற்றும் 'ராஃபிள்ஸ் சிட்டி' கடைகளை 'கோர்டமெந்தா'விடம் ஒப்படைத்துள்ளதாக சென்ற மாதம் தெரிவித்திருந்தது.