சிங்கப்பூரில் கொவிட்-19 உயிரிழப்புகளைவிட டெங்கி உயிரிழப்புகள் அதிகம்

சிங்கப்பூரில் கொவிட்-19 உயிரிழப்புகளைவிட டெங்கி உயிரிழப்புகள் அதிகம்

2 mins read
c4524ed1-f0f8-4f14-bf50-7283b3e10c6e
-

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் டெங்­கி­யால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­கி­விட்­டது.

செப்­டம்­பர் மாத இறு­தி­வரை மொத்­தம் 29 பேர் டெங்கி பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோ­ரின் எண்­ணிக்கை 28 ஆக உள்­ளது. 2005ஆம் ஆண்­டில் டெங்­கி­யால் உயி­ரி­ழந்­த­வர்­கள் 25 பேர். இதுவே ஆக அதிக உயி­ரி­ழப்பு எண்­ணிக்­கை­யாக இருந்­தது. ஆனால் இவ்­வாண்டு இன்­னும் முடி­வ­டை­யாத நிலை­யில் உயி­ரி­ழப்­பு­ 29 ஆகி­விட்­டது.

காலாண்டு அடிப்­ப­டை­யில் டெங்கி உயி­ரி­ழப்­பு­கள் கணக்­கிடப்­ப­டு­வ­தால் மேலும் அதிக டெங்கி உயி­ரி­ழப்­பு­கள் நேர்ந்­தி­ருக்­குமா என்று கேட்­கப்­பட்­ட­தற்கு சுகா­தார அமைச்சு பதில் அளிக்க மறுத்­து­விட்­டது.

டெங்­கி­யால் உயி­ரி­ழந்த 29 பேரில், முதல் காலாண்­டில் எழு­வரும் இரண்­டாம் காலாண்­டில் ஒன்­பது பேரும் ஜூலை முதல் செப்­டம்­பர் மாதம் வரை 13 பேரும் அடங்­கு­வர். தேசிய சுற்­றுப்­புற அமைப்பு இம்­மா­தம் வெளி­யிட்ட காலாண்டு டெங்­கிக் கண்­கா­ணிப்­புத் தரவு மூலம், டெங்­கி­யால் உயி­ரி­ழந்­தோ­ரின் வயது 25க்கும் 92க்கும் இடைப்­பட்­டது என்று தெரியவந்­துள்­ளது.

இவ்­வாண்­டின் டெங்­கித் தொற்று, சிங்­கப்­பூ­ரில் இது­வரை ஏற்­பட்­டி­ராத ஆக மோச­மா­னது என்று கூறப்­ப­டு­கிறது. அதி­க­மானோர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­ட­து­டன் உயி­ரி­ழப்­பு­களும் அதி­க­மா­கி­விட்­டன.

இது­வரை சுமார் 34,000 பேர் டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இது சென்ற ஆண்டு பதி­வான டெங்­கிச் சம்­ப­வங்­க­ளை­விட 50% அதி­க­மா­கும்.

ஆனால் 100,000க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு டெங்கி பாதிப்பு இருக்­க­லாம் என்று நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர். ஏனெ­னில், பலர் மருத்­து­வ­ரைச் சென்று பார்க்­காமல் இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஜூலை மாதத்­தில் ஒரே வாரத்­தில் 1,792 பேருக்கு டெங்­கித் தொற்று உறு­தி­யா­னது. பல­முறை எச்­ச­ரித்­தும் இல்­லங்­க­ளி­லும் பொது இடங்­க­ளி­லும் ஆயி­ரக்­கணக்­கான டெங்கி இனப்­பெ­ருக்­கப் பகு­தி­கள் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன.

ஜூலைக்­கும் செப்­டம்­பர் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 6,800 இனப்­பெ­ருக்க இடங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டன.

ஆனால் கடந்த நான்கு வாரங்­களில் உறு­தி­செய்­யப்­படும் டெங்­கிச் சம்­ப­வங்­கள் குறைந்து வரு­கின்­றன. சென்ற வாரம் 355 சம்­ப­வங்­கள் பதி­வா­கின.

கொசு ஒழிப்பு தொடர்­பில் தனி­யார் தரை­வீ­டு­க­ளுக்கு உதவி

தனி­யார் தரை­வீ­டு­களில் வசிப்­போ­ருக்­குக் கொசு ஒழிப்பு தொடர்­பான பொருட்­களை தேசிய சுற்­றுப்­புற அமைப்பு வழங்­க­வுள்­ளது.

அதி­கா­ரி­கள் இவ்­வகை வீடு­களில் அதி­க­மான கொசு இனப்­பெ­ருக்க இடங்­க­ளைக் கண்­டு­பிடித்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. தக­வல் ஏடு, கொசுப் புழுக்­களை அழிக்க உதவும் மருந்து, ஒட்­டு­வில்­லை­கள், குளிர்­சா­த­னப் பெட்­டி மீது இடுவதற்கான காந்­த வில்லைகள் போன்­றவை குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­குத் தரப்­படும்.