என்டியுசியின் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 உதவி நிதித் திட்டம்

என்டியுசியின் மேம்படுத்தப்பட்ட கொவிட்-19 உதவி நிதித் திட்டம்

1 mins read
e58f4bd1-f392-48da-80bc-030c11161445
பயனாளர்களுடன் உரையாடிய என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) அதன் உதவி நிதிக்­கான விண்­ணப்­பங்­களை மீண்­டும் துவங்­கி­யுள்­ளது. அத்­து­டன் நிதி­யு­தவி பெறு­வோ­ருக்­கான தகுதி நிபந்­த­னை­க­ளை­யும் அது விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

கொவிட்-19 கொள்ளை நோயால் பாதிக்­கப்­பட்ட உறுப்­பினர்­க­ளுக்கு நிவா­ர­ணத் தொகை கிடைப்­ப­தற்­காக இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது. சுமார் 65,000 சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு $50 முதல் $300 வரை­யி­லான வழங்கு­தொ­கை­கள் கிடைக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

முதல் முறையாக தொடங்­கப்­பட்ட திட்­டத்­தின் மூலம் சுமார் 30,000 சங்க உறுப்­பி­னர்­கள் பல­ன­டைந்­தனர். இவர்­க­ளுக்­குத் தரப்­பட்ட வழங்­கு­தொ­கை­யின் மொத்த மதிப்பு $8 மில்­லி­யன். ஒதுக்கப் ­பட்ட $25 மில்­லி­ய­னில் மேம்­ப­டுத்­தப்­பட்ட உதவி நிதித் திட்­டத்­திற்­காக எஞ்­சிய $17 மில்­லி­யன் செல­வி­டப்­படும் என்று என்­டி­யுசி நேற்று தெரி­வித்­தது.

முதல் முறை விண்­ணப்­பித்­துத் தகு­தி­பெற்­ற­வர்­க­ளுக்கு டிசம்­பர் முற்­பா­தி­யில் வழங்­கு­தொகை கிடைக்­கும் என்று கூறப்­பட்­டது.

மேம்­ப­டுத்­தப்­பட்ட உதவி நிதித் திட்­டத்­திற்­குத் தகு­தி­பெற இவ்வாண்டு நவம்­பர் 23 முதல் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 28 வரை விண்­ணப்­பிக்­க­லாம்.