வரும் எருது ஆண்டை முன்னிட்டு சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று 10 வகை சிறப்பு நாணயங்களை வெளியிட்டது.
இவற்றைச் சேகரிப்பதில் விருப்பம் உள்ளவர்கள் 2021 எருது ஆண்டுக்கான நாணயங்களுக்கு இப்போது முன்பதிவு செய்யலாம். முன்பதிவுக்கான இறுதி நாள் டிசம்பர் 20. சிங்கப்பூர் நாணய ஆலை இச்சிறப்பு நாணயங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் விற்பனை செய்யவுள்ளது.
அதிகமானோர் முன்பதிவு செய்யும் பட்சத்தில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நாணயங்கள் வழங்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது. கோனித் தீவுப் பூங்காவைப் பின்னணியாகக் கொண்ட ஓர் எருது, 2021 நாணயத்தில் காணப்படும். நாணயங்கள் தனியாகவும் ஒரு தொகுப்பாகவும் விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

