சுடச் சுடச் செய்திகள்

மசெக மத்திய செயற்குழுவில் நான்கு புதிய உறுப்பினர்கள்

மக்­கள் செயல் கட்சி தனது 36வது மத்­திய செயற்­கு­ழு­வில் இடம்­பெற்­ற­வர்­களின் இறு­திப் பட்­டி­யலை நேற்று வெளி­யிட்­டது.

அதன்­படி, நான்கு புதிய உறுப்­பி­னர்­கள் மத்­திய செயற்­கு­ழு­வில் இடம்­பெற்­றுள்­ள­னர். திரு எட்­வின் டோங், திரு இங் சீ மெங், திரு அலெக்ஸ் யாம், திரு விக்­டர் லாய் ஆகி­யோரே அந்த நால்­வர்.

கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­ச­ரு­மான திரு டோங்­கும் திரு யாமும் கடந்த ஜூலை மாதத்­தில் நடை­பெற்ற பொதுத் தேர்­த­லில் மீண்­டும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள்.

தொழி­லா­ளர் இயக்­கத்­தின் தலை­வ­ரான திரு இங், செங்­காங் குழுத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு தோல்வி கண்­டார்.

அதே­போல, திரு லாய், அல்­ஜு­னிட் குழுத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு தோல்­வி­ய­டைந்­தார்.

அர­சாங்­கத்­துக்­கும் தொழி­லா­ளர் இயக்­கத்­துக்­கும் பல்­லாண்­டு­க­ளாக நெருங்­கிய தொடர்பு இருப்­ப­தால், தொழிற்­சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­யாக திரு இங், மக்­கள் செயல் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வில் இணைத்­துக்­கொள்­ளப்­படு­வார் என்று அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் எதிர்­பார்த்­த­னர்.

மசெக மத்­திய செயற்­கு­ழு­வில் பொறுப்பு வகிப்­ப­வர்­களும் நேற்று தேர்வு செய்­யப்­பட்­ட­னர்.

பிர­த­மர் லீ சியன் லூங், கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர்.

துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட், வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் முறையே கட்­சி­யின் முத­லாம், இரண்­டாம் உத­வித் தலை­மைச் செய­லா­ளர்­க­ளா­கத் தொடர்­கின்­ற­னர்.

அமைச்­சர்­கள் டெஸ்மண்ட் லீயும், கிரேஸ் ஃபூவும் கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­புச் செய­லா­ளர்­களா­கத் தொடர்­கின்­ற­னர்.

கட்­சி­யின் தலை­வ­ராக அமைச்­சர் கான் கிம் யோங், துணைத் தலை­வ­ராக அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, பொரு­ளா­ள­ராக அமைச்­சர் கா. சண்­மு­கம், துணைப் பொரு­ளா­ள­ராக அமைச்­சர் ஓங் யி காங் தேர்வு பெற்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon