இணையப் பாதுகாப்பு பற்றி போதிக்க கல்வியாளர்களுக்கு புதிய திட்டம்

அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு இணை­யப் பாது­காப்­பின் முக்­கி­யத்­துவம் பற்றி போதிக்க சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு அமைப்பு (சிஎஸ்ஏ), சிங்­கப்­பூர் கல்­வி­யா­ளர்­களு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்­ற­வி­ருக்­கிறது.

அந்த வகை­யில் சிஎஸ்ஏ அமைப்பு, ஆசி­ரி­யர்­கள், பள்­ளித் தலை­வர்­கள், வாழ்க்­கைத் தொழில் வழி­காட்டி ஆலோ­ச­கர்­கள் ஆகி­யோ­ருக்­காக எஸ்ஜி இணை­யக் கல்­வி­யா­ளர்­கள் திட்­டத்தை அறி­மு­க­ப்­ப­டுத்­தும்.

அதன் மூலம் அவர்­கள் இணை­யப் பாது­காப்­புத் துறை­யில் உள்ள பல்­வேறு அம்­சங்­கள், அதன் தொடர்­பி­லான வாழ்க்­கைத் தொழில் தெரி­வு­கள் போன்­ற­வற்றை, தொழில்­ துறை­யி­ன­ரு­டன் நடத்­தப்­படும் ஈடு­பாட்டு நிகழ்­வு­க­ளின் வழி தெரிந்து­ கொள்­வார்­கள்.

நேற்று நடை­பெற்ற முத­லா­வது சிங்­கப்­பூர் இணை­யப் பாது­காப்பு கல்­விக் கருத்­த­ரங்­கில் தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி இந்த விவ­ரங்­களை வெளி­யிட்­டார்.

இது­வரை இந்த இரண்டு நாள் நிகழ்­வுக்கு சுமார் 500 கல்­வி­யா­ளர்­கள் பதிந்­து­கொண்­டுள்­ள­னர். சிஎஸ்ஏ அமைப்பு மெய்­நி­கர் வழி­யாக ஏற்­பாடு செய்­துள்ள முத­லா­வது ஈடு­பாட்டு நிகழ்ச்சி இது.

“வாழ்க்­கைத் தொழில் தொடர்­பான விருப்­பங்­கள் சிக்­க­லா­னவை. அது இளை­யர்­க­ளி­டமே அதிக குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தும். கல்­வி­யா­ளர்­க­ளா­கிய நீங்­கள் கூறும் ஆலோ­சனை முக்­கிய பங்­காற்றி, இளம் வய­தி­ன­ர் மேம்­பட்ட முடி­வு­களை எடுக்க உறு­து­ணை­யாக இருக்­கும்.

“வேக­மாக மாறி வரும் இத்­து­றை­யில் இணை­யப் பாது­காப்பு விழிப்­பு­ணர்வை அதி­கப்­ப­டுத்த உங்­க­ளைப் போன்ற கல்­வி­யா­ளர்­களின் உதவி தேவைப்­ப­டு­கிறது.

“உங்­கள் முயற்­சி­யால், அடுத்­த தலை­மு­றை­யி­னர் தங்­க­ளுக்கு விருப்­ப­மான துறை­களில் பிர­கா­சிக்க நீங்­கள் உத­வ முடியும் என்று நம்­பு­கி­றோம்,” என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

இத்­திட்­டத்­தின் மூலம், பள்­ளித் தலை­வர்­களும் கல்­வி­யா­ளர்­களும் சிஸ்கோ நிறு­வ­னம், கெஸ்­பர்ஸ்கி செக்­கி­யோ­ரிட்டி நிறு­வ­னம், சிங்­கப்­பூர் கணி­னிச் சங்­கம் போன்ற பங்­கா­ளித்­துவ அமைப்­பு­கள் நடத்­தும் தக­வல் பகிர்வு வகுப்­பு­களில் சேர்ந்து பயில்­வ­து­டன் சிஎஸ்ஏ அமைப்பு ஏற்­பாடு செய்­யும் பணி­ம­னைச் சுற்­று­லாக்­க­ளுக்­குச் சென்று அங்கு மேற்­கொள்­ளப்­படும் வெவ்­வேறு வகை­யான இணை­யப் பாது­காப்பு அம்­சங்­க­ளைக் கற்­றுக்­கொள்­வார்­கள்.

இணை­யப் பாது­காப்­புத் துறை­யில், இணை­யப் பாது­காப்­புத் திட்­டங்­க­ளுக்­கான வடி­வ­மைப்­பா­ளர்­கள், இணைய ஊடு­ரு­வ­லைத் தடுக்­கும் நிபு­ணர்­கள் வரை வெவ்­வேறு வகை­யான, நல்ல ஊதி­யம் வழங்­கக்­கூ­டிய வாழ்க்­கைத் தொழில் பாதை­கள் உள்­ளன என்­பதை­யும் அமைச்சர் டாக்­டர் ஜனில் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!