பிரதமர் லீ: அமெரிக்க நிலையில் தெளிவில்லை

பிரதமர் லீ: அமெரிக்க நிலையில் தெளிவில்லை

3 mins read
af6a18a1-f263-46fa-bb70-24b293243aef
பிரதமர் லீ. படம்: Singapore Global Network/Facebook -

பசி­பிக் பங்­கா­ளித்­துவ நாடுகளின் முழுமையான முற்போக்கு வர்த்­தக உடன்­பாட்­டில் (CPTPP) அமெ­ரிக்கா சேர்ந்து தன்­னு­டைய வர்த்­த­கக் கத­வு­களை அகல திறந்­து­விட விரும்­புமா என்­பது இன்­ன­மும் தெளி­வா­கத் தெரிய­வில்லை என பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்துள்ளார்.

அமெ­ரிக்­கா­வின் அதி­ப­ராக பொறுப்­பேற்க இருக்­கும் பைடன், உலக வர்த்­த­கத்­திற்கு ஆத­ர­வாக பல­த­ரப்பு ஏற்­பாட்டு ஆத­ர­வா­ளர்­களை அதி­க­மாக கொண்­டி­ருக்­கக்­கூ­டும் என்­றா­லும் அமெ­ரிக்­கா­வின் நிலையில் இன்­ன­மும் தெளி­வில்லை என்றார் திரு லீ.

அமெ­ரிக்­கா­வின் இப்­போ­தைய அதி­பர் டிரம்ப் நிர்­வா­கத்­தின் போக்கு பற்றி கருத்­து­ரைத்த திரு லீ, அது சாத­கம், பாத­கம் என்ற வர்த்தக விகி­தாச்­சார அடிப்­ப­டை­யில் செயல்பட்டு வந்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

"உங்­க­ளு­டன் நடக்­கும் வர்த்­த­கத்­தில் எனக்கு உபரி இருந்­தால் எனக்கு நல்­லது. வர்த்­த­கப் பற்­றாக்­குறை என்­றால் எனக்கு கெட்டது என்ற அணு­கு­மு­றை­யையே அந்த நிர்­வா­கம் இது­வ­ரை­ கடைப்­பி­டித்து வந்­த­தா­கத் தெரி­கிறது," என்று திரு லீ கூறினார்.

ஆனால் வர்த்­த­கம் என்­பது இப்­ப­டிப்­பட்­டது அல்ல என்று திரு லீ கருத்­து­ரைத்­தார். ஆசி­ய பசிபிக் பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு அமைப்­பு­டன் (ஏபெக்) கூடிய மெய்­நி­கர் சந்­திப்பு ஒன்­றில் திரு லீ உரை­யாற்­றி­னார்.

"வர்த்­த­கம் என்­பது யாருக்­கும் பாதிப்பு இல்­லா­மல் வெற்­றியை ஏற்­ப­டுத்­தித் தரு­வ­தா­கும். உங்­களுட­னான வர்த்­த­கத்­தில் எனக்கு உபரி ஏற்­பட்டு இருக்­க­லாம். வேறு ஒரு­வ­ரு­டனான வர்த்­த­கத்­தில் எனக்குப் பற்­றாக்­குறை ஏற்­பட்டு இருக்­க­லாம்.

"இருந்­தா­லும் மொத்­தத்­தில் சம­நிலை ஏற்­படும் பட்­சத்­தில் பாதிப்பு ஒரு பொருட்டே அல்ல," என்று திரு லீ கூறி­னார்.

ஆனால் ஜன­வரி 20 வரை­யில் பதவி வகிக்­கப்போகும் அதி­பர் டிரம்ப்­பின் நிர்­வா­கத்­தின் கருத்து வேறு­பட்­ட­தாக இருந்து வந்­தி­ருக்­கிறது என்­பதை திரு லீ சுட்­டி­னார்.

அமெ­ரிக்­கா­வில் நடந்து முடிந்த அதி­பர் தேர்­த­லில் வெற்றிபெற்றுள்ள ஜன­நா­யக கட்­சி­யைச் சேர்ந்த பைடன் ஜன­வரி 20ஆம் தேதி பதவி ஏற்­பார்.

டிரம்ப் நிர்­வா­கம் தனது பதவி காலத்­திற்­குள் தங்­கள் நிலையை மாற்­றும் என்று தான் கரு­த­வில்லை என்­றும் திரு பைட­னின் புதிய நிர்­வா­கம் இதன் தொடர்­பில் எப்­படி செயல்­ப­டு­கிறது என்­பதை நாம் காண­வேண்டி இருக்­கிறது என்­றும் திரு லீ குறிப்­பிட்­டார்.

ஏபெக் அமைப்­பின் அந்­தக் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சியை நடத்­தி­ய­வ­ரும் சிங்­கப்­பூர் தொழில்­துறை சம்­மே­ளனத்­தின் தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யு­மான ஹோ மெங் கிட் முன்­வைத்த கேள்­விக்­குப் பதிலளித்து திரு லீ பேசி­னார்.

அமெ­ரிக்க அதி­பர் தேர்­தல் முடிவு ஏபெக்கை எப்­படி பாதிக்­கும் என்­றும் உல­கின் ஆகப் பெரிய வர்த்­தக உடன்­பா­டான முழுமை யான வட்­டார பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாட்­டில் (RCEP) அமெ­ரிக்கா கையெ­ழுத்­தி­டுமா என்­றும் திரு ஹோ கேட்­டி­ருந்­தார்.

இந்த இரண்டு உடன்­பா­டு­களும் ஆசி­ய பசி­பிக் வட்­டா­ரத்­தைத் தழு­விய தாராள வர்த்­தக இலக்கு ஒன்­றின் முக்­கிய அடிப்­படை அம்­சங்­க­ளா­கப் பார்க்­கப்­ப­டு­கின்­றன.

ஆசி­ய பசி­பிக் தாராள வர்த்­தக வட்­டா­ரம் (FTAAP) என்று இந்த இலக்கு குறிப்­பி­டப்­ப­டு­கிறது. இது பற்றி ஏபெக் உறுப்பு நாடு­கள் 2004 முதல் பேசி வரு­கின்­றன.

ஏபெக் அமைப்­பில் இந்த இலக்கு தொடர்­பில் முன்­னேற்­றம் மெது­வா­கத்­தான் ஏற்­பட்டு வரு­கிறது. இதற்கு என்ன கார­ணம் என்­பது பற்றி கருத்து கூறிய திரு லீ, அமெ­ரிக்கா வர்த்­த­கப் பிரச்­சினை­களை, ஓர் அமைப்­பில் அங்­கம் வகிக்­கும் பல தரப்பு பங்­காளி­க­ளை­யும் உள்­ள­டக்கி அதன் அடிப்­படை­யில் பேசி தீர்த்­துக்கொள்­வதற்­குப் பதி­லாக இரு தரப்பு அடிப்­ப­டை­யில் கையா­ளவே விரும்பு­கிறது என்று தெரி­வித்­தார்.

அதே­நே­ரத்­தில், பைட­னின் நிர்­வா­கம் உலக வர்த்­தக நிறு­வ­னத்­திற்­கும் ஏபெக்­கிற்­கும் அதி­க­மான ஆத­ர­வு­டன் நடந்­து­கொள்­ளக்­கூடும் என்­றா­லும் இது அமெ­ரிக்க உள்­நாட்டு அர­சி­ய­லைப் பெரி­தும் சார்ந்­தி­ருக்­கும் என்­றார் திரு லீ.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை கையெ­ழுத்­தி­டப்­பட்ட முழுமையான வட்­டார பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு (RCEP) பற்றி கருத்­து­ரைத்த திரு லீ, அது ஒரு பெரும் முன்­னேற்­றம் என்று வர்­ணித்­தார்.

இந்த உடன்­பாடு தொடர்­பான பேச்­சில் இருந்து சென்ற ஆண்டு இந்­தியா வில­கி­விட்­டது. இது ஏமாற்­றம் அளிப்­ப­தா­கத் தெரி­வித்த திரு லீ, ஒரு நாள் இந்த உடன்­பாட்­டில் இந்­தியா சேரும் என்று நம்­பிக்­கைத் தெரி­வித்­தார்.

இந்த உடன்­பாட்­டில் இருந்து ஏன் இந்­தியா விலகி இருக்­கிறது என்­பதைத் தன்­னால் புரிந்­து­கொள்ள முடி­கிறது என்­றும் ஆனா­லும் நீண்­ட­கா­லப் போக்­கில் இந்த உடன்­பாடு இந்­தி­யா­வுக்கு பொரு­ளி­யல் ரீதி­யில் நன்மை பயக்­கும் என்­றும் திரு லீ கருத்­து­ரைத்­தார்.