பொய்த் தகவல்: எட்டு பயணிகளிடம் விசாரணை

2 mins read
58102d9f-ecd8-4a74-bdf8-44a4b18223a2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தென் கொரியா மற்­றும் தாய்­லாந்து நாடு­களில் இருந்து இந்த மாதம் இங்கு வந்த எட்டு பய­ணி­கள் வீட்­டி­லேயே தங்கி இருந்­தது பற்றி பொய்­யான தக­வல்­க­ளைத் தெரி­வித்­தது தொடர்­பில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

அவர்­களில் நான்கு பேர் வெளி­நாட்­டி­னர். குற்­ற­வா­ளிகள் என தெரி­ய­வந்­தால் அவர்­க­ளின் நிரந்­த­ர­வாச உரிமை பறி­போ­க­லாம். அதுவும் வேலை அனு­மதி­களும் புதுப்­பிக்­கப்­ப­டா­மல் போவ­தற்கு வாய்ப்பு உள்­ளது.

குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வடி ஆணை­ய­மும் போலி­சும் அறிக்கை ஒன்­றில் இத­னைத் தெரிவித்­தன. நான்கு சிங்­கப்­பூ­ரர்­கள், இரண்டு நிரந்­த­ர­வா­சி­கள், இரண்டு நீண்ட கால அனு­மதி அட்­டை­தார்­கள் ஆகி­யோர் அடங்­கிய அந்த எட்டு பேரும், குறிப்­பிட்ட இடங்­களில் தனி­மைப்­ப­டுத்திக்கொள்­ள­ வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்டது.

ஆனால் இதைத் தவிர்க்கும் வகை­யில் அவர்­கள் பொய்த்­த­கவல்­க­ளைத் தெரிவித்­த­னர் என்று அந்த அமைப்­பு­கள் குறி­ப்பிட்­டு உள்­ளன.

அவர்­கள் நவம்­பர் 5ஆம் தேதிக்கும் நவம்­பர் 12ஆம் தேதிக்­கும் இடை­யில் இங்கு வந்­த­னர்.

குறிப்­பிட்ட இடங்­களில் தங்­களைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­வதற்­குப் பதி­லாக தங்­க­ளின் தங்கு ­மி­டங்­க­ளி­லேயே தனித்து இருக்க தங்­களை அனு­ம­திக்­கும்­படி அவர்­கள் கேட்டு இருந்­த­னர்.

தங்­கு­மி­டத்­தில் தாங்­கள் மட்­டும் தனித்து இருக்­கப்­போவதாக அல்­லது தங்­க­ளைப் போல் அதே பய­ணங்­களை மேற்­கொண்ட, அதே காலத்­துக்­குத் தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள குடும்­பத்­தினர்­க­ளு­டன் தங்­கப்­போ­வ­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்தனர்.

அதி­காரி­கள், நவம்­பர் 6ஆம் ­தேதிக்­கும் 13ஆம் தேதிக்­கும் இடை­யில் அவர்­கள் தங்­கு­மி­டங்­களில் சோதனையிட்­ட­னர்.

தனிமை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படாத குடும்ப உறுப்­பி­னர்­க­ளு­டன் அவர்­கள் தங்கி இருந்­ததை அதி­கா­ரி­கள் கண்­ட­னர். அதனை அடுத்து அவர்­கள் எட்டு பேரும் குறிப்­பிட்ட தனிமை இடத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு தனித்து வைக்­கப்­பட்­ட­னர்.

இப்­போது அந்த எட்டு பேரை­யும் போலிஸ் விசா­ரித்து வரு­கிறது. வழக்­குத் தொடுக்­கப்படும் வாய்ப்பு உள்­ளது.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை­யாக, பொது­மக்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தும் முயற்­சி­யாக அந்த எட்டு பேருடன் சேர்ந்து தங்கி இருந்த குடும்ப உறுப்­பி­னர்­கள் தனி­மை­யில் இருக்­க­வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

ஃபிஜி, ஜப்­பான், தென் கொரியா, இலங்கை, தாய்­லாந்து, துருக்கி நாடு­களில் இருந்து வரு­வோர், சில நிபந்­த­னை­க­ளு­டன், தனிமை இடங்­க­ளுக்­குப் பதி­லாக பொருத்­த­மான தங்­கள் இருப்­பி­டங்­களில் தங்­க­ளை 14 நாட்­கள் தனி­மைப்­படுத்­திக்­கொள்ள அனு­ம­திக்­கப்­படு­கி­றார்­கள்.