ஒரே இடத்தில் ஏர்பஸ் செயல்பாடுகள்; சிலேத்தாரில் புதிய வளாகம் திறப்பு

விமா­னத் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான ஏர்­பஸ் செயல்பாடுகள் அனைத்­தை­யும் ஒரே இடத்­தில் இடம்­பெ­றச் செய்­யும் வகை­யில் சிலேத்­தா­ரில் $38 மில்­லி­யன் செல­வில் கட்­டப்­பட்ட ஒரு வளா­கம் நேற்று அதிகார பூர்­வ­மாகத் திறக்­கப்­பட்­டது.

கொவிட்-19 கார­ண­மாக உல­களா­விய விமா­னப் போக்­கு­வ­ரத்து துறை­யும் ஆகாய தொழில் து­றை­யும் மிகமோ­ச­மா­கப் பாதிக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

பரா­ம­ரிப்­புச் சேவை­களும் விமானத் தயா­ரிப்­பும் 40% குறைந்து­விட்­டன. பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 66 விழுக்­காடு படுத்­து­விட்­டது. இந்த நிலை­யில் ஏர்­பஸ் நிறு­வ­னம் ஒரே இடத்­தில் தன்­னு­டைய செயல்­பா­டு­கள் அனைத்­தை­யும் ஒருங்­கி­ணைக்­கிறது.

புதிய வளா­கம் 51,000 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் அமைக்­கப்­பட்டு இருக்­கிறது. இது ஏழு காற்­பந்துத் திடல்களைவிட பரப்­ப­ள­வில் கொஞ்­சம் அதி­க­மா­னது.

சிங்­கப்­பூ­ரில் ஏர்­பஸ் கொண்­டி­ருக்­கும் நம்­பிக்­கைக்கு இது அடை­யா­ள­மா­கத் திகழ்­வ­தாக வர்த்­தக தொழில் அமைச்­சர் சான் சுன் சிங் நேற்று வளா­கத்­தின் அதி­கா­ரபூர்வ திறப்­பு­வி­ழா­வில் தெரி­வித்­தார்.

“கொவிட்-19க்கு முன்பு இது இடம்­பெற்­றி­ருந்­தால் இங்கு விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை­யில் இடம்­பெ­றக்­கூ­டிய மற்­றொரு முதலீடாக இதை நாம் கரு­து­வோம்.

“விமா­னத் தொழில்­துறை வளர்ந்து வரு­வது பற்றி இப்­போ­தைய சூழ்­நி­லை­யில் நினைத்து பார்ப்­ப­வர்­கள் வெகு சிலரே. இந்­தச் சூழ­லில் இந்த வளா­கம் திறக்­கப்­ப­டு­வது குறிப்­பி­டத்­தக்­கது,” என்று அமைச்­சர் கூறி­னார்.

ஐரோப்­பாவை சேர்ந்த ஏர்­பஸ் நிறு­வ­னத்­தில் சிங்­கப்­பூ­ரில் ஏறக்­கு­றைய 800 பேர் வேலை பார்க்­கிறார்­கள். உல­கம் முழு­வ­தும் இந்த நிறு­வ­னத்­தில் 130,000க்கும் அதிக ஊழி­யர்­கள் பணி­யாற்­று­கி­றார்­கள்.

ஏர்­பஸ் நிறு­வ­னம் சுமார் 50 ஆண்டு கால­மாக சிங்­கப்­பூ­ரில் செயல்­பட்டு வரு­கிறது. 1969ல் சிங்கப்­பூர் விமா­னப் படைக்கு அது முதன்­மு­த­லாக நான்கு ஹெலி­காப்­டர்­களை விற்­றது.

அது முதல் சிங்­கப்­பூ­ரில் ஆகா­யத் தொழில்­து­றை­யைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளு­டன் ஏர்­பஸ் அணுக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது.

சிங்கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­து­டன் கூட்­டாக முத­லீடு செய்து விமா­னி­க­ளுக்கு அது பயிற்சி அளிக்­கிறது. ­ஆய்­வு­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!