மோசடி செய்தியைத் தடுக்கும் செயலி அறிமுகம்

மோசடி செய்தியைத் தடுக்கும் செயலி அறிமுகம்

1 mins read
d821ead4-fe10-4b08-84bc-a8ae9645d238
படம்: SCREENGRAB FROM APPLE APP STORE -
Google News Preferred Icon

மோசடி அழைப்புகளும் செய்திகளும் கைபேசிப் பயனீட்டாளர்களைப் போய் சேராமல் தடுத்துவிடக்கூடிய புதிய கைத்தொலைபேசி செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

'ஸ்கேம்ஷீல்டு' என்று குறிப்பிடப்படும் அந்தச் செயலி, ஒருவருக்கு வரக்கூடிய குறுஞ்செய்திகளையும் அழைப்புகளையும் பரிசோதிக்கும்.

ஏற்கெனவே நன்கு தெரிந்திருக்கும் மோசடி எண்கள் அடங்கிய பட்டியல் அந்தச் செயலியில் இருப்பதால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகளையும் குறுஞ்செய்திகளையும் அது தடுத்துவிடும்.

தேசிய குற்றச்செயல் தடுப்பு மன்றமும் 'ஓப்பன் கவர்ன்மென்ட் புரோடெக்ட்ஸ்' என்ற நிறுவனமும் புதிய செயலியை உருவாக்கி உள்ளன.

இந்தப் புதிய செயலியை பயன்படுத்துவோர் தங்களுடைய கைபேசி எண்ணைப் பதிய வேண்டிய தேவையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.