வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த ஐவருக்கு கிருமித்தொற்று

1 mins read
242e81bb-df3e-4995-a70b-e6d56dae1fd2
-

சிங்கப்பூரில் மேலும் ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் ஐவரும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூக அளவிலும் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலும் தொடர்ந்து 11வது நாளாக எவருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58,148ஆக உள்ளது.