சிங்கப்பூரின் பசுமை முயற்சிக்கு வலுசேர்க்கும் லோர்னி இயற்கைப் பாதை திறக்கப்பட்டுள்ளது

சிங்கப்பூரின் பசுமை முயற்சிக்கு வலுசேர்க்கும் லோர்னி இயற்கைப் பாதை திறக்கப்பட்டுள்ளது

2 mins read
cdb0fb7c-c78f-4650-b34b-b8750803f413
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் (இடது) நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின்னும் நேற்று மரம் நட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சைக்­கி­ளோட்­டி­களும் நடைப்பயணம் மேற்­கொள்­ப­வர்­களும் இனி 1.76 கிலோ மீட்­டர் நீள­மு­டைய லோர்னி இயற்­கைப் பாதை­யைப் பயன்­ப­டுத்­த­லாம். 'ஜூரோங் லேக்' தோட்­டத்­தில் தொடங்­கிய கோனி தீவுப் பூங்கா வரை செல்­லும் 'கோஸ்ட் டு கோஸ்ட்' பாதை­யில் இந்­தப் புதிய பகுதி இடம்­பெ­று­கிறது.

நேற்று திறக்­கப்­பட்ட லோர்னி இயற்­கைப் பாதை, மேக்­ரிட்சி நீர்த்­தேக்­கப் பூங்­கா­வுக்­கும் ஆடம் ரோட்­டிற்­கும் இடை­யி­லான பசு­மைப் பாதை­யா­கத் திகழ்­கிறது. நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்ட தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ, சமூ­கத்­து­டன் சேர்ந்து அந்­தப் பாதை­யில் 150 மரங்­களை நட்­டார்.

'ஒரு மில்­லி­யன் மரங்­கள்' இயக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக இந்தத் திட்டம் அமை­கிறது. இவ்­வாண்டு ஏப்­ர­லில் தொடங்­கப்­பட்ட அந்த இயக்­கத்­தின்­கீழ் இது­வரை 80,000க்கும் அதி­க­மான மரங்­கள் நடப்­பட்­டுள்­ளன. 2030ஆம் ஆண்­டிற்­குள் ஒரு மில்­லி­யன் மரங்­களை நட அந்த இயக்­கம் இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரில் தற்­போது ஏறத்­தாழ ஏழு மில்­லி­யன் மரங்­கள் உள்­ளன.

"அடுத்த 10 ஆண்­டு­களில் சிங்­கப்­பூரை இயற்கை எழில் கொஞ்­சும் நக­ர­மாக உரு­மாற்­றும் நமது கடப்­பாட்­டின் ஒரு பகு­தி­யாக இந்த முயற்­சி­கள் அமை­கின்­றன. நக­ர­ம­ய­மாக்­க­லா­லும் பரு­வ­நிலை மாற்­றத்­தா­லும் ஏற்­படும் தாக்­கத்­தைக் குறைக்க இது உத­வும்.

"மேலும், சிங்­கப்­பூ­ரர்­கள் இயற்கை வச­தி­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் வாழ்­வ­தற்­கு­ரிய ஒரு சுற்­றுச்­சூ­ழலை உரு­வாக்­க­வும் இந்த முயற்சி கைகொ­டுக்­கும்," என்­றார் அமைச்­சர் லீ.

கியம் ஹோக் ரோடு முதல் அப்பர் தாம்சன் ரோடு வரை செல்­லும் 10 கிலோ மீட்­டர் பாதை­யின் ஒரு பகு­தி­யா­க­வும் லோர்னி இயற்­கைப் பாதை அமை­கிறது.

லோர்னி நெடுஞ்சாலை கட்­டப்­பட்ட பிறகு, ஏழு தடங்­க­ளைக் கொண்­டி­ருந்த லோர்னி சாலையை நான்கு தடங்­க­ளாகக் குறைத்து, அதன் மூலம் மிச்­சப்­ப­டுத்­தப்­பட்ட இடத்­தில் லோர்னி இயற்­கைப் பாதை அமைக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், லோர்னி நெடுஞ்சாலை கட்டு­மா­னப் பணி­க­ளால் புக்கிட் பிரௌன் இடு­காட்­டின் ஒரு பகுதி பாதிக்­கப்­பட்­டதை திரு லீ சுட்­டி­னார்.

"போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்­பு­களை மேம்­ப­டுத்­தும்­போ­தும் நமது மர­பு­டைமை மற்­றும் உயி­ரி­னப் பன்­மயத்தை விட்­டுக்­கொ­டுப்­ப­தில் நாங்­கள் போராட வேண்­டி­யி­ருந்­தது. எனி­னும், அர­சாங்­கத்­திற்­கும் இயற்கை, மர­பு­டை­மைக் குழுக்­களுக்­கும் இடையே கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­தி­ய­தன் மூலம் இந்­தச் சிர­ம­மான விவ­கா­ரங்­க­ளுக்­குத் தீர்வு கண்­டோம்," என்­றார் அவர்.