புக்கிட் பாஞ்சாங்கில் மெய்நிகர் தீபாவளிக் கொண்டாட்டம்

புக்­கிட் பாஞ்­சாங் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, திருமதி கௌசல்யா ராமச்­சந்­திரா தலை­மை­யில் ஏற்­பாடு செய்த தீபா­வளி நிகழ்ச்சி இந்த ஆண்டு மெய்­நி­கர் வழி­யாக இம்­மா­தம் 8ஆம் தேதி நடைபெற்றது.

புக்­கிட் பாஞ்­சாங் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு லியாங் எங் ஹூவா குத்­து­வி­ளக்­கேற்றி தீபா­வளி நிகழ்ச்­சி­யைத் தொடங்கி வைத்­தார்.

அந்­தக் கொண்­டாட்­ட­த்தில் கொவிட்-19 சூழ­லின் விதி­மு­றை­களின்­படி புக்­கிட் பாஞ்­சாங் சமூ­க­ மன்ற அரங்­கில் குறைந்த எண்­ணிக்­கை­யி­லான உறுப்­பி­னர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும் மட்­டும் அனு­மதிக்­கப்­பட்­ட­னர்.

இவ்­வாண்டு தீபா­வ­ளிக் கொண்­டாட்­டத்­தில் கண்­ணா­டி­யில் ஓவி­யம், மறு­ப­ய­னீட்­டுப் பொருட்­க­ளைக்­கொண்டு புத்­தாக்க முறை­யி­லான ரங்­கோலி கோலம், கண்­க­ளுக்கு விருந்­த­ளிக்­கும் வகை­யில் இந்­தியப் பாரம்­ப­ரிய உடை­களில் அழ­கி­கள் பவனி வந்­த­னர்.

நிகழ்ச்­சியை நேரில் காண முடி­யா­விட்­டா­லும் இணை­யம் வழி பலரும் கண்டு மகிழ்ந்­த­னர்.

புக்­கிட் ­பாஞ்­சாங் வட்­டா­ரத்­தில் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்­குத் தீபா­வளி அன்­ப­ளிப்­பா­கப் பல­காரங்­கள், டி-சட்டை, பொருள்­கள் அடங்­கிய பைக­ளு­டன் பண உத­வி­யும் வழங்­கப்­பட்­டது.

கொவிட்-19 சூழலில் பல­ வகை­யில் பாதிப்பு ஏற்­பட்­டா­லும், இவ்­வட்­டார மக்­க­ளின் பண்­டிகை கால மகிழ்ச்­சியை இந்த நற்­செ­யல்­கள் அதி­க­ரித்­துள்­ளது என்­ப­தில் ஐய­ம் இல்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!